அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றனர். முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி தொடர்ந்து ஆடி வருகிறது. 

Continues below advertisement

சதம் விளாசிய ராகுல்:

ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு அவுட்டான நிலையில், சாய் சுதர்சன் 7 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - சுப்மன்கில் ஜோடி அபாரமாக ஆடினர். 90 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 188 ரன்களில் பிரிந்தது. அபாரமாக ஆடிய சுப்மன்கில் 100 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறிது நேரத்தில் அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் விளாசினார். 

Continues below advertisement

100 ரன்களை எட்டிய கே.எல்.ராகுல் 197 பந்துகளில் 12 பவுண்டரியுடன் வாரிகன் சுழலில் சிக்கி அவுட்டானார். பின்னர், விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் - ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர். மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்த நிலையில், துருவ் ஜுரல்- ஜடேஜா ஜோடி அபாரமாக ஆடியது. 

செஞ்சுரி நோக்கி துருவ்:

இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், அவ்வப்போது சிக்ஸரும் விளாசினர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் அதிரடியாக ஏறியது. சிறப்பாக ஆடிய துருவ் ஜுரல் அரைசதம் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 2வது அரைசதம் ஆகும். மறுமுனையில் ஜடேஜாவும் அபாரமாக ஆடி வருகிறார். 60 ரன்களை கடந்து ஆடி வரும் ஜுரல் சதம் விளாசுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

வெற்றி பெறுமா இந்தியா?

இந்திய அணி 300 ரன்களை கடந்து ஆடி வருகிறது. மேலும், வெளியில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி பேட்டிங்கிற்கு தயாராக உள்ளனர். இந்தியா 91 ஓவர்கள் முடிவில் 311 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் மிகப்பெரிய ஸ்கோரை குவித்தால் வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி ஏற்படுவதுடன் இந்திய அணி சிறப்பாக பந்துவீசினால் இன்னிங்ஸ் தோல்வியும் உறுதியாகிவிடும். 

இந்திய அணி 150 ரன்களுக்கு மேல் தற்போது முன்னிலையில் உள்ளது. போட்டி முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளதால் இந்த போட்டிக்கு கண்டிப்பாக முடிவு உள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் அவர்கள் தடுமாறி வருகின்றனர். பேட்டிங்கில் கேம்ப்பெல், சந்தர்பால், அதானசே, ப்ரண்டன் கிங், கிரீவ்ஸ் என இளம் வீரர்களே உள்ளனர். கேப்டன் சேஸ், ஹோப் மட்டுமே சற்று அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆவார்கள்.  பந்துவீச்சிலும் வாரிகன், காரி ப்யர்ரி, ஜோகன் லேய்ன், சீயலேஸ் உள்ளனர். இவர்களும் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீச தடுமாறி வருகின்றனர்.