வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆடும் 1000வது ஒருநாள் போட்டி இது என்பதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முதல் இன்னிங்ஸில் நடந்தது என்ன?


முதலில் பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, 3வது ஓவரிலேயே விக்கெட் சரிந்தது. சிராஜ் ஓவரில் ஷாய் ஹோப் விக்கெட் சரிந்தது. அடுத்து களமிறங்கிய பேட்டர்களும் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழ்ந்ததால், 100 ரன்களை கடக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. ஜேசன் ராய் மட்டும் தனி ஆளாய் போராடி அரை சதம் கடந்தார். இந்திய அணி பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, சாஹல் 4 விக்கெட்டுகள், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள், சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் எடுத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. 






போட்டி ஹைலைட்ஸ்:



  • இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல், ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்தார். 


வரலாறு எப்படி?


இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இதுவரை 133 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அவற்றில் 64 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 63 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவில்லை. இந்த போட்டியில் விராட்கோலி 6 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறிப்பார். இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண