முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை த்ரிலோக்சந்த் ரெய்னா, புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். காசியாபாத்தில் வசித்து வந்த அவர், உடல் நலம் பாதிப்பு காரணமாக இன்று காலாமான அவருக்கு, கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார் ரெய்னாவின் தந்தை த்ரிலோக்சந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உடல்நலம் மோசமடைந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
ரெய்னாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங், “சுரேஷ் ரெய்னாவின் தந்தை மறைவு செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என ட்வீட் செய்திருக்கிறார்.
முன்னதாக, இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர் உடல்நலம் பாதிப்பு காரணமாக இன்று காலை மும்பை மருத்துவமனையில் காலமானார். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவு செய்திருந்தார். அவர் மறைவு செய்திக்கு இரங்கல் தெரிவித்த சில மணி நேரங்களில், ரெய்னாவின் தந்தை உயிரிழந்திருப்பது ரெய்னாவின் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்