இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. இந்திய அணியின் 35ஆவது டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் மயாங்க் அகர்வால் நிதான துவக்கத்தை அளித்தனர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பாக 100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் விராட் கோலியை கௌரவிக்கும் வகையில் ஒரு சிறப்பு தொப்பியை வழங்கியது. அப்போது விராட் கோலியுடன் சக இந்திய வீரர்கள் மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா இருந்தனர். இந்த சிறப்பு தொப்பியை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட் கோலிக்கு கொடுத்தார்.
அப்போது பேசிய விராட் கோலி,”100 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் போது என்னுடைய அண்ணன் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் உடன் உள்ளனர். என்னுடைய சிறுவயது ஹீரோவிடம் இருந்து இந்த தொப்பியை பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரின் இந்தப் படம் வேகமாக வைரலாகி வருகிறது. ட்விட்டரில் பலரும் இந்தப் படத்தை பதிவிட்டு கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்