டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் கபில்தேவை முந்தினார் அஸ்வின். 435 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கபில்தேவை முந்தி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார்.


இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. 


இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தின் முதல் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது. 


இதையடுத்து இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர் லஹிரு திரிமானேவின் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்தார். அதன்பின்னர் நிஷன்காவின் விக்கெட்டையும் ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கபில்தேவ் எடுத்திருந்த 434 விக்கெட்கள் என்ற சாதனையை சமன் செய்தார். இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் கபில்தேவை முந்தினார் அஸ்வின். அசலன்காவை வீழ்த்தியதன் மூலம் 435 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கபில்தேவை முந்தி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார்.


 






அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்கள்


619 அனில் கும்ப்ளே
435  அஸ்வின்
434  கபில்தேவ்
417  ஹர்பஜன் சிங்
311 ஜாகீர்கான்/ இஷாந்த் சர்மா


இலங்கை அணி சற்று முன்பு வரை 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இந்தியா வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண