இந்தியா - இலங்கை போட்டி:


இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர். டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இருவரும் ஒரு நாள் போட்டியில் களம் இறங்க உள்ளனர் என்பதால் இந்த போட்டி இருவருக்கும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இச்சூழலில் இருவரும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் செய்யவிருக்கும் சாதனை குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


விராட் கோலி செய்யவிருக்கும் சாதனை:


இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்களை கடக்க உள்ளார். அந்த சாதனையை செய்வதற்கு விராட் கோலிக்கு தேவைப்படும் ரன்கள் வெறும் 152 மட்டும் தான். முன்னதாக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த இந்திய வீரர் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான். இலங்கை அணி முன்னாள் வீரர் குமார் சங்காகரா 14,000 ரன்களை கடந்த வீரராக இருக்கும் சூழலில் இந்த சாதனை பட்டியலில் மூன்றாவது வீரராக விராட் கோலி இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரோஹித் ஷர்மா செய்யவிருக்கும் சாதனை:


இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்) மற்றும் விராட் கோலி (13,848 ரன்கள்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். வரவிருக்கும் இந்தியா இலங்கை தொடரில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்தியாவுக்காக ODI போட்டிகளில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற வாய்ப்பைப் பெறுவார். தற்போது, ​​இந்தப் பட்டியலில் ரோஹித்தை விட ராகுல் டிராவிட் (10,786), சவுரவ் கங்குலி (11,221) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.


மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா இலங்கை  தொடரின் முதல் ஒருநாள் போட்டி இலங்கையின் கொழும்பில் உள்ள R. பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 28ஆம் தேதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.