இந்தியா - இலங்கை டி20:


இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் நேரடியாக மோதுகின்றன. இதில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.


அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கியானர்கள். இருவரும் சிறப்பான தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்துக் கொடுத்தனர். அப்போது 34 ரன்களில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஜெய்ஸ்வாலும் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 40 ரன்களை குவித்தார். அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார்.


அவருடன் ஜோடி அமைத்த ரிஷப் பண்டும் சிறப்பாக விளையாடினார். சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 26 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 58 ரன்களை குவித்தார்.அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். 33 பந்துகள் களத்தில் நின்ற அவர் 49 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. 


இந்திய அணி வெற்றி:


இலங்கை அணி 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பதும் நிஷாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களது ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.


139 ரன்கள் வரை இவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது மெண்டில் 45 ரன்களில் அர்ஷ்தீப் ஷிங் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் நிஷாங்கா உடன் ஜோடி சேர்ந்தார் குசல் பெரேரா. இதனிடையே நிஷாங்கா ஆட்டமிழந்தார். 48 பந்துகள் களத்தில் நின்ற 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 79 ரன்கள் குவித்தார்.


அடுத்ததாக குசல் பெரேராவும் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கமிந்து மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா களம் இறங்கினார்கள். இதில் கமிந்து மெண்டிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது இலங்கை அணி.


சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த  அந்த அணி  19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள்மட்டுமே எடுத்தது. அந்த வகையில் இந்திய அணி இலங்கை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.