இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது. 


 


இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஜடேஜா சதம் விளாசி அசத்தினார். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கடைசி வரை ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 175 ரன்களுடன் இருந்தார். 


 






இதைத் தொடர்ந்து இலங்கை அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. அப்போது இலங்கையின் முதல் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் வீரர்கள் களத்திற்குள் வந்தனர். அந்த சமயத்தில் விராட் கோலி வழக்கம் போல் வேகமாக களத்திற்குள் நுழைந்தார். 


 






அதைப் பார்த்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் கோலியை வெளியே இருந்து களத்திற்குள் வர சொல்லி இந்திய வீரர்களை இரு புறமும் நிற்க வைத்து கார்டு ஆஃப் ஹானர் கொடுத்தார். விராட் கோலிக்கு இந்தப் போட்டி 100 டெஸ்ட் போட்டி என்பதால் இந்திய வீரர்கள் அவருக்கு இந்த கௌரவத்தை கொடுத்தனர். மேலும் இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவர்களுடைய நட்பை பாராட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண