இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 


இந்தநிலையில், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசான்கா மற்றும் குனதிலங்கா களமிறங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா ரன் எதுவும் எடுக்காமல் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதனைதொடர்ந்து அடுத்த ஓவரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ்கான் வீசிய இரண்டாவது ஓவர் கடைசி பந்தில் நிசான்கா 1 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 






4 ரன்கள் எடுத்திருந்த அசலங்கா ஆவேஷ்கான் வீசிய 4 ஓவரில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ஒரு கட்டத்தில் இலங்கை அணி 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்களுடன் தடுமாறியது. தொடர்ந்து அடுத்தடுத்து 2 விக்கெட்கள் விழ, இலங்கை அணி 100 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. 






இந்தநிலையில், இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா களமிறங்கி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 38 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 146 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண