IND vs SL 3rd ODI LIVE: இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றி

IND vs SL 3rd ODI LIVE Updates: இந்தியா - இலங்கை இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் அறிய ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 15 Jan 2023 06:45 PM
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இலங்கை அணி

391 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 39 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 390 ரன்கள் எடுத்துள்ளது. 

கோலி மிரட்டல் சதம்..!

அதிரடியாக ஆடி வரும் கோலி சதத்தை பூர்த்தி செய்துள்ளார். 85 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். 44.3 ஓவர்கள் முடிவில் 114 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

74வது சதத்தை விளாசிய விரட் கோலி

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச போட்டிகளில் கோலி அடிக்கும் 74வது சதம் ஆகும்.

கோலி மிரட்டலான ஆட்டம்..

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, 48 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து 8 பவுண்டரிகள் உட்பட, 73 ரன்களை சேர்த்து கோலி விளையாடி வருகிறார். 

அதிரடியாக ஆடிய கில் ஆட்டமிழப்பு...!

தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆடி வந்த சுப்மன் கில் 116 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சதம் அடித்த சுப்மன் கில்...

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சதம் அடித்து விளாசினார். 89 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 100 ரன்களை குவித்தார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும்.

இந்திய அணி அதிரடி பேட்டிங்..100 ரன்களை கடந்து அசத்தல்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 42 ரன்களில் அவுட்டாக, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் அரைசதத்தை நெருங்கியுள்ளார். 18 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 113 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியா vs இலங்கை: 5.2 ஓவர்கள் / இந்தியா - 26 /0 ரன்கள்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. 

டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைவி ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

இலங்கை அணி விவரம்:

அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தசுன் ஷனக, அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, கசுன் ராஜித, லஹிரு குமார, ஜெப்ரி வான்டர்சே

Background

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளது.


இந்த போட்டிக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள், திருவனந்தபுரத்திற்கு வந்ததும் அவர்களுக்கு கேரளாவின் பாரம்பரிய முறைப்படி கதகளி நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊர் திரும்பியதன் காரணமாக,  தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் திருவனந்தபுரம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இரு அணிகளும் தீவிரம்:


தொடரை ஏற்கனவே 2-0 என கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டி-20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதலடைய முனைப்பு காட்டி வருகிறது.


இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ள சூழலில், போதிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் இலங்கை அணி திணறி வருகிறது. இதனால், கடைசி போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.


நேருக்கு - நேர்


இதுவரை இரு அணிகளும் 164 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் இந்திய அணி 95 போட்டிகளிலும், இலங்கை அணி 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. அதோடு, கடந்த போட்டியில் தோற்றதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்வியை கண்ட அணியின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தகக்து.


இந்தியா அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்


இலங்கை அணி விவரம்:


நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, லஹிரு குமார, கசுன் ராஜித


விராட் கோலி படைக்க இருக்கும் புதிய சாதனை: 


விராட் கோலி இலங்கைக்கு எதிராக இதுவரை 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2337 ரன்கள்  எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக அதிக ரன்களை குவித்ததில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர் விராட் கோலியை விட முன்னிலையில் உள்ளனர். தற்போது டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பில்லை என்றாலும், தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. 


தோனி இலங்கைக்கு எதிராக 67 ஒருநாள் போட்டிகளில் 2383 ரன்கள் எடுத்துள்ளார். இந்தநிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்தால், இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரராக இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார். சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிராக 84 போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் 3113 ரன்கள் எடுத்துள்ளார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.