IND vs SL 2nd T20I LIVE: 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி தோல்வி!

இந்தியா- இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் காண ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்

முகேஷ் Last Updated: 05 Jan 2023 10:45 PM
IND vs SL 2nd T20I LIVE: இலங்கை அணி வெற்றி!

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

IND vs SL 2nd T20I LIVE: இலங்கை அணி வெற்றி!

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

IND vs SL 2nd T20I LIVE: நிதானமாக ஆடிவரும் இந்திய அணி!

இந்திய அணி 17.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து இலக்கை எட்ட விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: அக்‌ஷார் படேல் அரை சதம்!

பேட்ஸ்மேன் அக்‌ஷார் படேல் 21 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

IND vs SL 2nd T20I LIVE: விளையாட்டு மைதானத்தில் சிக்ஸர் மழை!

பேட்ஸ்மேன்கள் அக்‌ஷார் படேல், சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: நிதானமாக விளையாடி வருகிறது இந்திய அணி!

இந்திய அணி 13. 3ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 116 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: தீபக் ஹூடா அவுட்!

பேட்ஸ்மேன் தீபக் ஹூடா 12 பந்துகளுக்கு 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 57 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: தீபக் ஹூடா அவுட்!

பேட்ஸ்மேன் தீபக் ஹூடா 12 பந்துகளுக்கு 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 57 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: 8 ஓவர் முடிவில் இந்தியா 52 ரன்!

இந்திய அணி எட்டு ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிறகு 54 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: 5 ஓவர் முடிவில் இந்திய அணியில் ஸ்கோர் நிலவரம்!

இந்திய அணி 5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: 5 ஓவர் முடிவில் இந்திய அணியில் ஸ்கோர் நிலவரம்!

இந்திய அணி 5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: 5 ஓவர் முடிவில் இந்திய அணியில் ஸ்கோர் நிலவரம்!

இந்திய அணி 5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: 2.3 ஓவர் முடிவில் 26 ரன்களுடன் இந்திய அணி களத்தில் உள்ளது.

இந்திய அணி 2.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: 2.3 ஓவர் முடிவில் 26 ரன்களுடன் இந்திய அணி களத்தில் உள்ளது.

இந்திய அணி 2.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs SL 2nd T20I LIVE: ராகுல் திரிபாதி அவுட்!

ராகுல் திரிபாதி இலங்கையில் தில்சான் மதுசன்கா பந்தில் அவுட் ஆனார்.

IND vs SL 2nd T20I LIVE: சுப்மன் கில் அவுட்!

இந்திய வீரர் சுப்மன் கில் பெவிலியன் திரும்பினார். 3 பந்துகளுக்கு 5 ரன் எடுத்து அவுட் ஆனார். 


 

IND vs SL 2nd T20I LIVE: இந்தியாவுக்கு 206 ரன் இலக்கு

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. 


 

4வது விக்கெட்டும் போச்சு.. இலங்கை அணிக்கு என்னதான் ஆச்சு..?

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 13.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. 

உம்ரான் வேகம்.. ராஜபக்சேக்கு ஆனது சோகம்..!

3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த ராஜபக்சே, உம்ரான் மாலிக் வேகத்தில் சரிந்தார்.

முதல் விக்கெட்டை இழந்த இலங்கை.. தட்டித்தூக்கிய சாஹல்..!

இந்தியாவிற்கு எதிராக 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிய குசல் மெண்டீஸ், சஹால் வீசிய 9 வது ஓவரில் அவுட்டானார். 

3 ஓவர்களில் 30 ரன்களை கடந்த இலங்கை அணி.. வெளுக்கும் குசல் மெண்டீஸ்..!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 3 ஓவர்களில் 30 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 

பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி.. பழிவாங்குமா இலங்கை அணி..!

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

Background

இலங்கை அணியுடனான 2வது டி20 இன்று நடைபெறும் நிலையில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். 






இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


முதல் போட்டியில் இந்திய வீரர்களில் தொடக்க வீரர் இஷான் கிஷன் (37 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (29 ரன்கள்), தீபக் ஹூடா( 41 ரன்கள்), அக்சார் படேல் (31 ரன்கள்) எடுக்க 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்க முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 






11 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 68 ரன்களில் இலங்கை அணி தசுன் சனகா மற்றும் ஹசரங்காவின் அதிரடி ஆட்டத்தில் வெற்றிக்கு அருகில் சென்று கோட்டை விட்டது. இலங்கை அணியின் ஆட்டத்தை இந்திய ரசிகர்களே பாராட்டினர்.  இந்திய அணியில் அதிகபட்சமாக மாவி 4 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். 


இன்று 2வது டி20 போட்டி 


இந்நிலையில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.  அவர் கடைசி போட்டியிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் எடுப்பதற்காக மும்பையில் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  




2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாக ஜிதேஷ் அந்த சீசனில் மிடில் ஆர்டரில் களமிறங்கி 163.64 ஸ்ட்ரைக் ரேட்டில் 234 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இலங்கை தொடரில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்


ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார். 






 





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.