இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி புனே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், இலங்கை அணியின் தொடக்க வீரர்களாஅ பதும் நிசன்கா மற்றும் குசல் மெண்டீஸ் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட, விக்கெட் எடுக்க இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தவித்தனர்.
தொடர்ந்து, 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிய குசல் மெண்டீஸ், சஹால் வீசிய 9 வது ஓவரில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 80 ரன்கள் எடுத்திருந்தது. 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த ராஜபக்சே, உம்ரான் மாலிக் வேகத்தில் சரிய, மற்றொரு தொடக்க வீரர் நிசன்கா 33 ரன்களில் அக்சார் பந்தில் அவுட்டானார்.
அடுத்து வந்த தனஞ்சயா சி சில்வாவும் அக்சார் பந்தில் 3 ரன்களில் நடையை கட்டினார். இலங்கை அணி 13.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து தடுமாற தொடங்கியது.
ஒரு பக்கம் விக்கெட்கள் விழுந்தாலும் அசலங்கா, எந்தவொரு சலனமும் அதிரடியில் ஈடுபட்டார். அவர் 19 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 37 ரன்கள் எடுத்து அசத்த, உம்ரான் மாலிக் அசலங்கா பந்தில் வெளியேறினார். அடுத்ததாக உள்ளே வந்த ஹசரங்காவையும் முதல் பந்திலேயே உம்ரான் மாலிக் காலி செய்தார்.
17 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்கள் 147 ரன்கள் எடுத்திருந்தது. 18 வது ஒரு பவுண்டரி, 2 சிக்ஸ்களை சனகா பறக்கவிட இலங்கை அணி 160 ரன்களை கடந்தது. 19 வது ஓவரை அர்தீப் சிங் வீசிய நிலையில், 18 ரன்களை விட்டு கொடுத்தார்.
சிவம் மாவி வீசிய கடைசி ஓவர் முதல் பந்தே சனகா சிக்ஸரை பறக்கவிட, தொடர்ந்து 4வது பந்திலும் சிக்ஸரை பறக்கவிட்டு தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இலங்கை 200 ரன்களை தொட்டது. கடைசி பந்து சிக்ஸராக சனகா முடிக்க, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.