IND vs SL 2nd ODI Score LIVE: இந்திய அணி அபாரம்.. தொடரை வென்று அசத்தல்

IND vs SL 2nd ODI Score Live: இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்த லைவ்-அப்டேட்ஸ்க்கு ஏபிபி நாடு இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 12 Jan 2023 09:14 PM
இந்திய அணி அபாரம்.. தொடரை வென்று அசத்தல்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி நிதான ஆட்டம்..

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், ராகுல் - பாண்ட்யா கூட்டணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு, 147 ரன்களை சேர்த்துள்ளது.

ரோகித், கில், கோலி அவுட்.. தடுமாறும் இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 216 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. அதில், ரோகித், கில் மற்றும் கோலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 81 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி மிரட்டல்.. 215 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக நுவனிடு பெர்னாண்டோ 50 ரன்களை சேர்த்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியில், அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி..

36 ஓவர் முடிவில் இலங்கை அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்துள்ளது, இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. அதன்படி, 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு, 122 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

விக்கெட்..!

6வது ஓவரின் கடைசி பந்தில் அவிஷ்கா 17 பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில், முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறியுள்ளார். 

5 ஓவர்கள் முடிவில் இலங்கை..!

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகிறது. 

நுவாய்னுடுவின் முதல் பவுண்டரி..!

இலங்கை அணியின் பேட்ஸ் மேனாக இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான நுவாய்னுடு சர்வதேச கிரிக்கெட்டில்  தனது ரன் கணக்கினை பவுண்டரியுடன் தொடங்கியுள்ளார். இவர் இந்த பவுண்டரியை அடிக்க 10 பந்துகள் எடுத்துக்கொண்டார். 

ஹாட்ரிக் பவுண்டரி..!

போட்டியின் 4வது ஓவரின் முதல் மூன்று பந்தில் இலங்கை அணியின் ஆவிஷ்கா மூன்று பவுண்டரிகளை பறக்கவிட்டு அதகளப்படுத்தியுள்ளார். இந்த ஓவரை முகமது சிராஜ் வீசினார். 

முதல் பவுண்டரி..!

போட்டியின் முதல் பந்தில் நுவாய்னுடு ஃபெர்ணாண்டோ பவுண்டரி விளாசி, இலங்கை அணியின் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். முதல் ஓவரை இந்திய அணியின் முகமது ஷமி வீசினார். 

பேட்டிங் தொடங்கிய இலங்கை..!

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணியின் இன்னிங்ஸை, ஃபெர்ணாண்டோ மற்றும் அவிஷ்கா ஆகியோர் தொடங்கியுள்ளனர். 

இந்தியாவுக்கு இருக்கும் சிக்கல் இதுதான்..!

டாஸ் தோற்ற இந்திய அணி இந்த போட்டியில் சேசிங் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பலமான பேட்டிங் வரிசை இருந்தாலும், நேரம் ஆக ஆக பனியின் தாக்கம் மைதானத்தில் வெளிப்படும் என்பதால், இந்திய அணிக்கு பேட்டிங் செய்வதில் சிரமம் இருக்கும். 

முதல் பேட்டிங்கிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம்..!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடைசி 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது என்பதால் இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய அணியின் பலமான பேட்டிங் வரிசையால் சேசிங்கிலும் வெற்றி பெரும் என நம்பலாம். 

இலங்கை அணி..!

இலங்கை : குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, துனித் வெல்லலகே, லஹிரு குமார, கசுன் ரஜிதா

இந்திய அணி..!

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்

இந்த ஆட்டத்தில் சஹால் இல்லை..!

முதலாவதுப் ஒருநாள் போட்டியின் போது டைவ் அடித்ததில் சஹால் காயமடைந்தார், காயத்தில் இருந்து இன்னும் மீளாத சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளார். 

டாஸ் வென்றது இலங்கை..!

ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

ஈடன் கார்டனில் கடைசி 5 போட்டிகள்..!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டியில் டாஸ் மிக முக்கியமான ஒன்றாக கருத்தப்படும். 

Background

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே டி20 போட்டித் தொடரினை 2-1 என்ற கணக்கில் இழந்தது. நேற்று முன்தினம் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது இந்திய அணி முன்னிலை வகிப்பதால் அடுத்த இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கும். 


ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை அணி ஆல்-அவுட் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அணியின் கேப்டன் ஷனகா நிலைத்து நின்று விளையாடி 88 பந்தில் 108 ரன்கள் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளிக்கும்  ஆட்டத்தினை வெளிப்படுத்தியதுடன், இந்திய பந்து வீச்சினை எப்படி  எதிர்கொள்ள வேண்டும் என தனது அணிக்கு செய்து காட்டி இருக்கிறார். போட்டியில் தோற்றாலும், ஒரு வீரனாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதினை வென்ற பின்னர் தான் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 


ஷனகாவின் சதம் இலங்கை அணிக்கு ஒரு தனி உத்வேகத்தினை அளித்திருக்கும், இந்நிலையில், இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியினை வெல்ல பெரும் நம்பிக்கையோடு களமிறங்கவுள்ளது. ஆனால் இலங்கை அணிக்கு இருக்கக் கூடிய சவால் அதன் பலத்தினை விடவும் பலமடங்கு பெரிய பேட்டிங் பட்டாளத்தினை கொண்டுள்ள இந்திய அணியை சமாளிக்க உத்வேகம் மட்டும் போதாது, புது உத்தியும் தேவை, அப்படியான உத்தியுடன் இலங்கை அணி செயல்படுமா என்பதை போட்டியின் போதுதான் பார்க்க வேண்டும். 


இந்திய அணியைப் பொறுத்தவரையில் சொந்த ஊரில் நடக்கும் போட்டி என்பதால் கொஞ்சம் ரிலாக்‌ஷாகத்தான் விளையாடும். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு மிகவும் ராசியான மைதானம் என்றால் அது இன்று போட்டி நடைபெறவுள்ள ஈடன் கார்டன் மைதானம் தான். சுப்மன் கில் ஐபிஎல் தொடரில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பெற காரணமாக இருந்த மைதானம் என்பதால், தொடக்க வீரர்கள் இருவரிடமும் இருந்து தரமான சம்பவத்தினை எதிர்பார்க்கலாம். 


இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் இதுவரை 163 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 94 போட்டிகளிலும், இலங்கை அணி 57 போட்டிகளிலும் வென்றுள்ளன. 11 போட்டிகள் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. 


இந்தியா vs இலங்கை 2வது ODIயை நான் எப்படி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்?


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இராண்டாவது ஒருநாள் போட்டியின் நேரடி ஒளிபரப்பை இந்தியாவில் உள்ள ஹாட்ஸ்டார் செயலியில் காணலாம்.


இந்தியா:  ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷுப்மன் கில், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ். முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.


இலங்கை:  தசுன் ஷனக (கேப்டன்), நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, அஷேன் பண்டார, பதும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, சாமிக்க கருணாரத்னே, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம (விக்கெட் கீப்பர்), டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷங்க, பிரமோத். வெல்லலகே, ஜெஃப்ரி வான்டர்சே, கசுன் ராஜித, லஹிரு குமார, மற்றும் மஹீஷ் தீக்ஷன.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.