IND vs SL 1st Test Live: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி

IND vs SL 1st Test LIVE Updates: இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது.

ABP NADU Last Updated: 06 Mar 2022 04:14 PM
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மொகாலியில் நடந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்களை வித்தியாசத்தில் இலங்கை அணியை இந்தியா வென்றது.

9 விக்கெட்டை இழந்த இலங்கை - இந்தியா வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே..!

இலங்கை அணி 9 விக்கெட்டை இழந்தது. விஸ்வா பெர்ணான்டோ விக்கெட்டை ஷமி வீழ்த்தினார்.

இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்தது - வெற்றியை நோக்கி இந்தியா..!

அதிக விக்கெட் - கபில்தேவை முந்திய அஸ்வின்

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் கபில்தேவை முந்தினார் அஸ்வின். 435 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கபில்தேவை முந்தி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய வீரர் கபில்தேவின் சாதனையை சமன் செய்த அஷ்வின்

இலங்கை அணியின் நிஷன்கா விக்கெட்டை ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 434 விக்கெட் வீழ்த்தி இந்திய வீரர் கபில்தேவின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார். 

மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் இலங்கை அணி 10/1

இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி உணவு இடைவேளையின் போது 10 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

இலங்கை வீரர் ஹெரத் சாதனையை சமன் செய்த அஷ்வின்

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் லஹிரு திரிமானேவின் விக்கெட்டை இந்திய வீரர் அஷ்வின் எடுத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 433 விக்கெட் எடுத்து இலங்கை வீரர் ஹெரத்தின் சாதனையை சமன் செய்துள்ளார். 

ஃபாலோ ஆன் செய்த இலங்கை

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இலங்கை அணி 400 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இலங்கைக்கு ஃபாலா ஆன் கொடுத்தது.

174 ரன்களுக்கு சுருண்ட இலங்கை

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது. 

ஜடேஜா அசத்தல் 5 விக்கெட்...

இலங்கை அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். 

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் பந்துவீச்சு

இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு : இலங்கை அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட்

மொகாலியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. நிசங்கா 26 ரன்களுடனும், அசலங்கா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

108 ரன்களுக்கு 4 விக்கெட்..! இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இலங்கை..!

இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறி வரும் இலங்கை அணி சற்றுமுன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் நிசங்கா 26 ரன்களுடனும், அசலங்கா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள்...! நிதானமாக ஆடும் இலங்கை..!

இந்திய அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இலங்கை அணி சற்று முன் வரை 100 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. 

நிசங்காவை போல்டாக்கிய பும்ரா..! நோ பால் என்ற அம்பயர்..!

இலங்கை வீரர் பதும் நிசங்கா 14 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தபோது பும்ரா வீசிய பந்தில் போல்டானார். இந்த மகிழ்ச்சியை இந்திய வீரர்கள் கொண்டாடும் முன்னரே அந்த பந்து நோ பால் என்று அம்பயர் அறிவித்தார். 

இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இலங்கை...!

இந்திய அணி முதல் இன்னிங்சில் 574 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் லகிரு திரிமன்னே ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது வரை இலங்கை அணி 79 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. 

முதல் விக்கெட்டை இழந்தது இலங்கை..!

இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை தொடக்க வீரர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இருந்தபோதிலும், அந்த அணியின் ஸ்கோர் 48 ரன்களை எட்டியபோது தொடக்க வீரர் லகிரு திரிமன்னே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். 

500 ரன்களை கடந்து இந்தியா அதிரடி

தொடர்ந்து ஜடேஜா களத்தில் நிற்க, 150 ரன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்திய அணி 500 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

இரண்டு ரன்களுக்கு ஜெயந்த் யாதவ் அவுட்

இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனை அடுத்து விளையாடிய ஜெயந்த் யாதவ், 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து, ஷமி களமிறங்கி இருக்கிறார்

அரை சதம் அடித்த பண்ட்

4 பவுண்டரிகள்,1 சிக்சர்கள் என 75 பந்துகளில் அரை சதம் கடந்து பண்ட் அசத்தல். 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்களை தாண்டி இந்திய அணி விளையாடி வருகிறது.

5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்களை கடந்திருக்கும் இந்திய அணி

விஹாரி அரை சதம் கடந்து அவுட்டாக, கோலி அரை சதம் எடுக்கும் முன் அவுட்டானார். 72 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இந்திய அணி

சிக்ஸர் விளாசிய ரிஷப் பாண்ட்

48 வது ஓவரின் 2 வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரிஷப் பண்ட். 8 பந்துகளுக்கு அவர் 8 ரன்கள் எடுத்துள்ளார்

சிறப்பாக ஆடிய விகாரி ஆட்டமிழந்தார்

சிறப்பாக முதல் இன்னிங்ஸ் ஆடி வந்த அனுமன் விகாரி 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி  47 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரையாஸ் விளையாடி வருகின்றனர். 

4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரிஷப் பாண்ட்

கோலி அட்டமிழந்ததை தொடர்ந்து, 4வது விக்கெட்டிற்கு ரிஷப் பண்ட் களமிறங்கியுள்ளார்

அரை சதத்தை தவற விட்ட கோலி: போல்ட் ஆனார்!

43.3 வது ஓவரில் சிறப்பாக ஆடிய கோலி, 45 ரன்னில் போல்டானார். எம்பில்டினியா சுழற்பந்தில் அவர் விக்கெட்டை இழந்தார்.  இந்திய அணி170 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 

40 ஓவருக்கு இந்தியா 160 ரன்

இந்திய அணி, 40 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து, 160 ரன்கள் எடுத்துள்ளது. அனுமன் விகாரி மற்றும் வீராட் கோலி களத்தில் உள்ளனர். 

விகாரி அரை சதம்.. அசத்தும் இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்  போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அனுமன் விகாரி அரை சதம் அடித்து அசத்தினார். அவருடன் 36 ரன்களுடன் விராட் கோலி களத்தில் உள்ளார். இந்திய அணி 37.3 ஓவருக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. 

54 ரன்கள் சேர்த்த வீராட்-விகாரி ஜோடி!

இந்திய அணியில் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வீராட் கோலி -விகாரி ஜோடி 71 பந்துகளுக்கு 54  ரன்கள் சேர்த்துள்ளது. 

31 ஓவரில் இந்திய அணி 130/2

31 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 24, விகாரி 41 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

உணவு இடைவெளிக்குப் பின் தொடங்கியது போட்டி

இந்தியா-இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி, உணவு இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்கியது. 

முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்தியா 109/2

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் குவித்துள்ளது. விஹாரி 30 ரன்களுடனும் விராட் கோலி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

22 ஓவர்களில் இந்திய அணி 99/2

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. 

விராட் கோலியை வரவேற்ற இந்திய ரசிகர்கள்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பேட்டிங் ஆட வெளியே வந்த போது அவரை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். 


வீடியோ:


 





மயாங்க் அகர்வால் 33 ரன்களுக்கு அவுட்:

கேப்டன் ரோகித் சர்மாவை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் 33 ரன்களில் எம்பில்டுனியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

29 ரன்னில் வெளியேறிய ரோகித் சர்மா

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 29 ரன்களில் லஹிரு குமாரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் 35ஆவது டெஸ்ட் கேப்டன் ரோகித்

இந்திய அணியின் 35ஆவது டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா இன்று செயல்பட உள்ளார்.

100ஆவது டெஸ்ட் போட்டி விராட் கோலியை கௌரவித்த பிசிசிஐ

இந்திய அணியின் வீரர் விராட் கோலி இன்று தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவரை கௌரவிக்கும் விதத்தில் பிசிசிஐ இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு சிறப்பு தொப்பியை வழங்கியுள்ளது.

இலங்கை அணியின் விவரம்:

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம்:


 





இந்திய அணியின் விவரம்:

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம்:


 





டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் !

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Background

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது.இந்திய வீரர் விராட் கோலிக்கு இது 100ஆவது போட்டியாகும். ஆகவே இந்த டெஸ்ட் போட்டியின் மீது அதிக ஆர்வம் எழுந்துள்ளது. அத்துடன் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மாவின் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் அதில் மேலும் சுவாரஸ்யம் எழுந்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.