ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதற்காக தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். 


 


இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் புதிதாக இடம்பிடித்துள்ள உம்ரான் மாலிக் ஒரு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியை பிசிசிஐ தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “2022ஆம் ஆண்டு என்னுடைய முதல் ஐபிஎல் தொடர் அந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசி நான் 22 விக்கெட் வீழ்த்தினேன். அதற்கு பிறகு இந்தியாவிற்கு விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு அது தற்போது நிறைவேற உள்ளது. 


 






பயிற்சியாளார் ராகுல் டிராவிட் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரஸ் ஆகியோர் எனக்கு நல்ல ஊக்கம் அளித்துள்ளனர். அது எனக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் என் மீது நல்ல நம்பிக்கை வைத்திருந்தார். 


 


நான் இந்திய அணிக்கு தேர்வாகிய செய்தி வந்த போது நான் சன்ரைசர்ஸ் அணியுடன் இருந்தேன். அந்த சமயத்தில் என்னுடன் சன்ரைசர்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெயின் இருந்தார். அவர் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே அவர் இதுகுறித்து என்னிடம் கூறினார். அதாவது நீ ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு நிச்சயம் இந்தியாவிற்கு விளையாடுவாய் என்று கூறியிருந்தார். அது தற்போது உண்மையாகியுள்ளது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சிறப்பாக செயல்படுவேன்” எனத் தெரிவித்துள்ளார். 


 


2022 ஐபிஎல் தொடரில் வேகமாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்களில் உம்ரான் மாலிக் மிகவும் முக்கியமான ஒருவர். இவர் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன்காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண