டி20 உலகக் கோப்பை:


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாகவும், தென்னாப்ரிக்கா அணி முதல் முறையாகவும் முன்னேறியுள்ளது.


தங்களது இரண்டாவது டி20 கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல் ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி, இன்று தொடங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள பார்படாஸில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


டாப் பேட்ஸ்மேன்கள் காலி:


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இவரகளது ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பொய்யாக்கினார். அதாவது 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் விளாசி 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தொடங்கினார்.






ரோஹித் ஷர்மாவின் இடத்தை இவர் தன்னுடைய பேட்டிங் மூலம் நிரப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். 23 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி. அப்போது சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த அக்சர் படேல் 47 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக 106 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.