ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் பின்னர், நடந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி:
இச்சூழலில், தான் வரும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதில், 3 டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இதில், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு டி 20 போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், டி 20 போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
ரவி பிஷ்னோயிக்கு இடம் கிடைக்குமா?
இதனிடையே, சர்வதேச அளவில் ஐசிசி வெளியிட்டுள்ள டி 20 தரவரிசைப் பட்டியலில், நம்பர் ஒன் பந்து வீச்சாளர் என்ற பெருமையை இந்திய அணியின் இளம் வீரர் ரவி பிஷ்னோய் பிடித்தார்.
இந்நிலையில் தான், உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தும் ரவி பிஸ்னோயால் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர் ஜடேஜா அணிக்கு திரும்பியிருக்கிறார். இதனால் அவரது தான் வாய்ப்பு வழங்கப்படும்.
இதே போன்று இரண்டாவது சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணிக்கு திரும்பியிருக்கிறார். பிளேயிங் லெவனில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் ரவி பிஷ்னோயால் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ரசிகர்கள் பலரும், ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தால் கூட சீனியர்கள் வந்தால் உங்களுக்கு அணியில் இடம் கிடைக்காது என்ற நிலைதான் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும்,இதனால் சீனியர், ஜூனியர் என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு யார் தன்னுடைய திறமையை நிரூபித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Babar Azam: உலகக்கோப்பை தொடரின்போது கண் கலங்கிய பாபர் அசாம்... ரஹ்மனுல்லா குர்பாஸ் சொன்ன தகவல்! விவரம் இதோ!
மேலும் படிக்க: Dhoni CSK : தோனி இடத்துக்கு இவர்தான் சரியான ஆளு.. தமிழக வீரரை தட்டித்தூக்க காத்திருக்கும் சிஎஸ்கே! விவரம் இதோ!