தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்பு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று முதலில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்களில் பவுமா மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து ஆடினார். மற்ற வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் எடுத்தன் மூலம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளார். அதாவது வெளிநாடுகளில் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட் வீழ்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்:
பந்துவீச்சாளர்கள் | 100ஆவது விக்கெட் எடுத்த வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் |
ஜஸ்பிரீத் பும்ரா | 23 |
சந்திரசேகர் | 25 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 26 |
பிஷன் சிங் பேடி | 28 |
ஜவகல் ஶ்ரீனாத் | 28 |
முகமது ஷமி | 28 |
2018-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் பும்ரா அறிமுகமாகினார். அப்போது முதல் தற்போது வரை 25 போட்டிகளில் பங்கேற்று உள்ள பும்ரா 106 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவற்றில் வெளிநாடுகளில் 23 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா பங்கேற்று 100 விக்கெட்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் இவர் 93 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆக மொத்தம் வெஸ்ட் இண்டீஸ் என சேர்த்து மொத்தமாக 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் மிகவும் குறைவான போட்டிகளில் வெளிநாடுகள் 100 விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்பரா பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: செஞ்சுரியன் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய அணி- சாதனை படைத்த விராட் படை !