IND vs SA T20 WC LIVE : விறுவிறு ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்ற தெ.ஆப்பிரிக்கா... சொதப்பல் ஃபீல்டிங்கால் கோட்டை விட்ட இந்தியா
T20 WC 2022, Match 30, IND vs SA: டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டியின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ABP பக்கத்தில் இணைந்திருங்கள்...
தென்னாப்பிரிக்கா அணி 17.4 ஓவரில் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
தென்னாப்ப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 19.4 ஓவரில் 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுக்க வேண்டும்.
டேவிட் மில்லர் 41 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ. முறையில் அவுட் ஆனார்.
தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை .
தென்னாப்பிரிக்கா அணி 17 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களத்தில் உள்ளனர்.
ஐடன் மார்க்ரம் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த போது ஹார்திக் பாண்டியா வீசிய பந்தில் சூர்ய குமார் யாதவிடன் கேட்ச் அவுட் ஆனார்.
தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் அரைசதம் அடித்துள்ளார். மார்க்ரம் 38 பந்துகளில் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 30 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ஷமி பந்து வீசுகிறார்.
தென்னாப்பிரிக்கா அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. ஐடன் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா அணி 6 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிறகு 25 எடுத்துள்ளது. ஏழாவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசுகிறார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு மூன்றாவது விக்கெட். முகமது ஷமி வீசிய பந்தில் டெம்பா பவுமா விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் அவுட் ஆனார்.
தென்னாப்பிரிக்கா அணி நான்கு ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்துள்ளது.
ரிலீ ரோசோவ் எல்.பி.டபுள்யூ. முறையில் அவுட் ஆனார். அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் அவுட் ஆனார். 3 பந்துகளில் 1 ரன்னுக்கு வெளியேறினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி! களத்தில் குவின்டன் - டி- காக் மற்றும் தென்மா பவுமா தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடியுள்ளனர்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 127 ரன் எடுத்துள்ளது.
சூர்ய குமார் யாதர் வெயின் பார்னெல் வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார். 40 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி 11 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சூரிய குமார் யாதவ், தினேஷ் கார்த்திக் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வருகிறது. களமிறங்கிய ஹார்திக் பாண்டியா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
3 பந்துகளுக்கு 2 ரன்கள் எடுத்து லுங்கி இங்கிட் பந்தில் ரபாடாவிடம் கேட்ச் அவுட் ஆனார்.
அடுத்துதடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்திய அணி. எட்டு ஓவர் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, தீபக் ஹூடா அவுட் ஆகி வெளியேறினர்.
இந்திய அணி ஆறு ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா லுங்கி இங்கிடி வீசிய பந்தில் Markram யிடம் கேட்ச் அவுட் ஆனார். ரோஹித் 13 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா லுங்கி இங்கிடி வீசிய பந்தில் கேட்ச் அவுட் ஆனார். ரோஹித் 14 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
IND vs SA, T20 WC LIVE: ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கியுள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கியுள்ளனர். முதல் ஓவர் முடிவில் ரன் ஏதும் எடுக்கவில்லை.
IND vs SA T20 WC LIVE : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!
டி20 உலகக் கோப்பையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணி மோதுகின்ற. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியில் எந்த வீரர் எதிரணிக்கு ஆபத்தாக இருப்பார் என்பது குறித்து இங்கே காணலாம்.
Background
T20 WC 2022, Match 30, IND vs SA: ஆஸ்திரேலியாவின் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மழை காரணமாக பல ஜாம்பவான் அணிகளின் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு சமமாக புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் எந்த அணி அரையிறுதிக்கு செல்லும்? யார் வெளியேறுவார்கள் என்ற சூழ்நிலை நீட்டித்து வருகிறது.
இந்தநிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு மூன்றாவது சுற்று போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்று போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் வங்கதேசமும், ஜிம்பாவே அணிகளும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும், நெதர்லாந்தும், மூன்றாவது போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுக்கின்றனர்.
இந்திய அணியை பொறுத்தவரை குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.
அதேபோல், தென்னாப்பிரிக்கா அணி இதுவரை இந்த தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு வெற்றியும், ஜிம்பாவே எதிரான போட்டியில் மழையால் ஒரு புள்ளியும் பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் நல்ல பார்மில் உள்ளனர். கே.எல்.ராகுல் கடந்த 2 போட்டிகளை போல் இல்லாமல் இந்த போட்டியில் பார்மிற்கு திரும்பினால் இந்திய அணியின் பலம் கைக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகமும், அஷ்வின் சுழலும் கைக்கொடுக்கிறது. இன்றைய போட்டியிலும் இந்த கூட்டணி அசத்தினால், தென்னாப்பிரிக்கா அணி நிச்சயம் திணறும். அதேபோல், அக்சார் பட்டேலுக்கு பதில், தீபக் ஹூடா களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ரன் வேகத்தை கூட்டினால் இந்திய அணியின் ஸ்கோர் உச்சம் பெறும்.
தென்னாப்பிரிக்கா அணியில் ரோசோவ் எதிரணிக்கு பயம் காட்டி வருகிறார். கடந்த இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் சதம் அடித்து மிரட்டிய ரோசோவ், கடந்த வங்க தேசத்திற்கு எதிராகவும் சதம் கண்டார். டி காக் வழக்கம்போல் சிறப்பான தொடக்கம் தரும் பட்சத்தில், தென்னாப்பிரிக்கா அணியின் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான பவுமா பார்ம் இன்னும் கேள்விகுறியாகவே உள்ளது. மிடில் ஆர்டரில் மில்லரின் மிரட்டல் அடி, பவுலிங்கில் நார்ட்ஜே, ராபாடா ஆகியோர் வேகத்தில் இந்திய அணிக்கு எதிராக அசத்தலாம்.
இருப்பினும், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த போட்டியில் இந்தியாவிற்கு வெற்றி பெறும் என்று பல ஜாம்பவான்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பெர்த்தில் நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
ஹெட் டூ ஹெட் :
சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரையில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளது. அதில், இந்தியா 13 முறையும், தென்னாப்பிரிக்கா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவில்லை.
அதேபோல், உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளது. அதிலும் இந்தியா 4 முறையும், தென்னாப்பிரிக்கா ஒரே ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளது.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல்/மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கிங்கிடி,ரபாடா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -