இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.


தொடக்க வீரர் ருதுராஜ் அணியின் ஸ்கோர் 13 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களில் அவுட்டாகினார். தொடக்க வீரர் இஷான் கிஷான் ஓரளவு அதிரடியாக ஆடினர். அவரும் 26 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார். கேப்டன் ரிஷப்பண்ட் நிதானமாக ஆடினார். ஆனால், அவர் 23 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார். இதனால், இந்திய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.




இதையடுத்து, துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், தினேஷ்கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, தினேஷ் கார்த்திக் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் விளாசினார். இதனால், இந்திய அணியின் ரன் விறுவிறுவென எகிறியது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


பவுண்டரிகளாக விளாசிய தினேஷ்கார்த்திக் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் அவுட்டாகினார். அவர் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாசி  அவுட்டாகினார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை விளாசியது.




தென்னாப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளையும், ஜான்சென், ப்ரெடோரியஸ், நோர்ட்ஜே மற்றும் கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஐ.பி.எல். தொடரில் அசத்திய தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக கடைசி கட்டத்தில் அசத்தி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண