IND vs SA 3rd Test LIVE: 70 ரன்கள் முன்னிலையில் இந்தியா... புஜாரா, கோலி களத்தில்
கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று விராட் கோலி தலைமையிலான அணி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Background
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்குகிறது.
டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனிங் பேட்டர்கள் கே.எல் ராகுல், மயாங்க் அகர்வால் பெரிதாக சோபிக்கவில்லை. அதனை அடுத்து கோலி களமிறங்கினார். நிதானமாக ஆடிய கேப்டன், 158 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தி இருக்கிறார். தென்னாப்ரிக்கா மண்ணில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராகவும், வெவ்வேறு இடங்களில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளிலும், அதிக முறை அரை சதம் கடந்த இந்திய கேப்டன் என்ற ரெக்கார்டை தன்வசப்படுத்தி இருக்கிறார் கோலி. தொடர்ந்து விளையாடிய அவர், 201 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் அவுட்டானார். கோலி தவிர புஜாரா மட்டும் தாக்குப்பிடித்து 43 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்டர்கள் சொதப்பியதால், இந்திய அணி 223 ரனக்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் நாள் ஆட்டம் மீதம் இருந்ததால், இந்திய அணியை அடுத்து தென்னாப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. டீன் எல்கர், மார்க்கரம் ஓப்பனிங் களமிறங்கினார். பும்ரா பந்துவீச்சில் 3 ரன்களுக்கு கேப்டன் எல்கர் அவுட்டாகினார். அவரை அடுத்து கேஷவ் மஹாராஜ் களமிறங்கி இருக்கிறார். இதனால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்ரிக்கா 17/1 என எடுத்து 206 ரன்கள் பின்தங்கி உள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று விராட் கோலி தலைமையிலான அணி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -