IND vs SA 3rd ODI Score LIVE : அரைசதத்தை தவறவிட்ட சுப்மன் கில்... தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய இந்தியா..
IND vs SA 3rd ODI : இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களுக்கு ரன் அவுட்டாகினார்.
3 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 100 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்ததுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 100 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்ததுள்ளது.
94 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தென்னாப்பிரிக்கா அணி தடுமாறி வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டேவிட் மில்லரை 7 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார் வாஷிங்டன் சுந்தர்.
நிதான ஆட்டத்தை வெளிபடுத்த நினைத்த மார்க்கரம் 19 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்தார். தற்போது தென்னாப்பிரிக்கா அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 14 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
சிராஜ் வீசிய 10 வது ஓவரில் 21 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த ரீசா ஹென்ட்ரிக்ஸ் ரவி பிஸ்னோயிடம் கேட்சானார்.
முகமது சிராஜ் வீசிய 8 வது ஓவரில் மாலன் 15 ரன்கள் எடுத்து ஆவேஷ் கானிடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
தென்னாப்பிரிக்கா அணி ஏழு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி நான்கு புள்ளி ஒரு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
குவின்டன் டி காக் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தில் அவினாஷ் கானிடன் கேட்ச் ஆனார். டி காக் (6) 10 ரன்களீள் ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்கா அணி 2.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெல்லி மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Background
IND vs RSA: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள காரணத்தால், தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட தென் ஆப்ரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 போட்டி முடிந்த விட்டதால் தற்போது ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த டி20 தொடரில் கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு போடிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே, மிடில் ஆர்டரில் இறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் போராடியும் வெற்றி பெற முடியவில்லை.
இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரை ஸ்ரேயஸ் ஐயர் 113 ரன்களும், இஷான் கிஷன் 93 ரன்களும் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தனர். தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெறவுள்ளதால், இரு அணி வீரர்களும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக உள்ள்னர்.
போட்டி மழையால் பாதிக்கப்படுமா..?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியும் மழையால் கைவிடப்பட வாய்ப்புகள் உள்ளது. செவ்வாய்க்கிழமை டெல்லியில் 40 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட இந்தியாவில் தற்போது மழை பெய்து வருவதால், அதன் தாக்கத்தை இங்கும் காணலாம்.
இந்தியா:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன். ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், ரஜத் பாடிதார், ஷாபாஸ்.
தென்னாப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிக் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தபரிஸ் ஷம்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென் பெஹ்லுக்வாயோ.
இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -