India vs South Africa 2nd Test: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 489 ரன்களுக்கு அவுட்டான நிலையில், இந்தியா 201 ரன்களுக்கு அவுட்டானது.
549 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி ஸ்டப்ஸ் 94 ரன்கள் அபாரமாக ஆடி எடுக்க, டோனி 49 ரன்கள் எடுக்க 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 549 ரன்களாக நிர்ணயித்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடியாக களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக ஆட முயற்சித்தது. ஆனால், ஜெய்ஸ்வால் 20 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்து ஜான்சென் பந்தில் வெர்ரெய்ன் பந்தில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 29 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ஹார்மர் பந்தில் போல்டானார்.
தோல்வியின் பிடியில் இந்தியா:
4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 522 ரன்கள் தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட் தேவைப்படுகிறது. இந்த போட்டி முடிய இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி என்பது மிகவும் அசாத்தியமாக உள்ளது. தற்போது இந்திய அணிக்காக சாய் சுதர்சன் 2 ரன்னிலும், குல்தீப் யாதவ் 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணிக்கு கைவசம் பேட்ஸ்மேன்களாக துருவ் ஜுரல், ரிஷப்பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரே உள்ளனர்.
பந்துவீச்சில் மிரட்டும் தென்னாப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்க அணிக்கு பக்கபலமாக ஜான்சென், ஹார்மர் பந்துவீச்சில் பக்கபலமாக உள்ளனர். இவர்களை சமாளித்து இந்திய அணி களத்தில் நங்கூரமிட்டு வெற்றி பெறுவது என்பது அசாத்தியமான ஒன்றாகும். வேகம் மற்றும் சுழல் என இரண்டிலும் தென்னாப்பிரிக்கா அணி மிரட்டுவதால் இந்திய அணிக்கு கடுமையான சவாலை கடைசி நாளான நாளை எதிர்கொள்ள உள்ளது.
இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இழக்க நேரிடும். அவ்வாறு தொடரை இழந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் கடும் சிரமம் உண்டாகும்.