தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டேவிட் மில்லர் மற்றும் வான்டர் டுசென் அதிரடியால் வெற்றி பெற்றது.


இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுமா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். 


அதன் அடிப்படையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பவுமா மற்றும் ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர். 


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் புவனேஸ்வர் குமார் முதல் ஓவர் வீசி ஹென்ட்ரிக்சை 4 ரன்களில் வெளியேற, அடுத்தடுத்த ஓவர்களையும் வீசி பிரிட்டோரியஸ் மற்றும் டெர் டஸ்ஸனையும் புவனேஸ்வர் குமார் வெளியேறினார். 


பவுமா உடன் இணைந்த க்ளாசன் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை தேவைகேற்ப கொண்டு சென்றனர். ஒரு கட்டத்தில் 10 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து 13 வது ஓவர் வீசி சாஹல் தொடக்கம் முதல் பொறுமையாக ஆடிவந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமாவை அவுட் செய்ய, மறுமுனை அதிரடியாக விளையாண்ட க்ளாசன் அரைசதம் அடித்து தென்னாப்பிரிக்கா அணி 100 ஐ கடக்கவும் உதவி செய்தார். 






 இந்திய அணி எதிராக வெற்றிபெற தென்னாப்பிரிக்கா அணிக்கு 30 பந்துகளில் 34 ரன்கள் தேவையாக இருக்க,  க்ளாசன் மற்றும் மில்லர் சாஹல் வீசிய 16 வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட கடைசி மூன்று ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. 


46 பந்துகளில் 80 ரன்கள் அடித்து க்ளாசன் ஹர்ஷல் பட்டேல் பந்தில் வெளியேற, அடுத்து வந்த பார்னல் 1 ரன்களில் வெளியேறினர். இருப்பினும் 10 பந்துகள் மீதம் வைத்து தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண