இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி, ராஞ்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா முதல் போட்டியில் வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணி முயற்சி செய்யும். 


முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கேசவ்மகாராஜ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெம்பா பாவுமா ஓய்வு எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. 






தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுகமாகிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவி பிஷ்னோய் இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு, இவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். அதேபோல், கடந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு சிறப்பாக விளையாடிய ஷாபாஸ் அகமது 2வது போட்டியில் அறிமுகமாகியுள்ளார். 


டாஸ் வென்ற பிறகு பேசிய கேசவ்மகாராஜ், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம், ஏனெனில் அது ஒரு நல்ல விக்கெட் போல் தெரிகிறது,  பலகையில் நிறைய ரன்களை வைக்க முயற்சிப்போம்பின்னர் எதிரணியைக் கட்டுப்படுத்துவோம். டெம்பா பவுமா மற்றும் தப்ரைஸ் ஷம்சி இன்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவர்களுக்குப் பதிலாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் பிஜோர்ன் ஃபோர்ட்யூன் களமிறங்குகின்றனர்.” என்று தெரிவித்தார். 


அடுத்ததாக இந்திய கேப்டன் தவான் பேசுகையில், “தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் பனியை  பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார்கள். எங்கள் அணியில் மேலும் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளோம். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் வந்துள்ளனர்” என்றார். 






இந்தியா :


ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் , குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்.


தென்னாப்பிரிக்கா :


ஜான்மேன் மலான், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ் (கேப்டன்), ககிசோ ரபாடா, ஜார்ன் ஃபோர்டுயின் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே . 


தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.