IND Vs SA 1st Test LIVE Score: 200 ரன்களைக் கடந்த இந்தியா; பந்து வீச்சில் மிரட்டும் ரபாடா; மழையால் தடைபட்ட ஆட்டம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

Continues below advertisement

LIVE

Background

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, மீண்டும் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ரோஹித் சர்மா. இந்த போட்டியில் வெற்றிபெற்று 2023ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் முடிக்க இந்திய அணி விரும்புகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

தொடரை வெல்லுமா இந்திய அணி:

இந்த டெஸ்ட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் இன்றுவரை இந்திய அணியால் தொடரை வெல்ல முடியாத ஒரே நாடு தென்னாப்பிரிக்கா. தொடரை வெல்வது ஒருபுறம் இருக்க, தென்னாப்பிரிக்காவில் இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா வெற்றிபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 4 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

1992ம் ஆண்டு இந்திய அணி முதல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுபயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. அன்றிலிருந்து 2022 வரை தென்னாப்பிரிக்காவில் இரு நாடுகளுக்கும் இடையே 8 முறை டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளன. இந்திய அணி இதுவரை இங்கு எந்த தொடரையும் வென்றதில்லை. 2010-11 சுற்றுப்பயணத்தின் போது, ​​இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.

இம்முறை தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை விட சற்று பலவீனமாக இருப்பதால், இவ்வாறான சூழ்நிலையில் இந்தியா தொடரை கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். எனவே, இரு அணிகளும் அதிகபட்ச புள்ளிகளை பெற விரும்புகின்றன. 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த சாதனை (நேருக்குநேர்)
மொத்த டெஸ்ட் போட்டிகள்: 42, இந்தியா வெற்றி: 15, தென்னாப்பிரிக்கா வெற்றி: 17, டிரா - 10 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் சாதனை (தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடந்தபோது)
மொத்த டெஸ்ட்: 23, தென்னாப்பிரிக்கா வெற்றி: 12, இந்தியா வெற்றி: 4, டிரா  - 7

போட்டியை எங்கு? எப்படி காணலாம்..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸின் அனைத்து சேனல்களிலும் கண்டு களிக்கலாம். மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆஃப்களில் நேரடியாக காணலாம். 

கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: 

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்ரீகர் பாரத், முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் 

Continues below advertisement
20:03 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: 200 ரன்களைக் கடந்த இந்தியா; பந்து வீச்சில் மிரட்டும் ரபாடா; மழையால் தடைபட்ட ஆட்டம்

59 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்துள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடை பட்டுள்ளது. 

19:39 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: 200 ரன்களைக் கடந்த இந்தியா

8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 58 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது. 

19:24 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: 8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

54.3 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்துள்ளது. 

19:19 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: அரைசதம் விளாசிய கே.எல். ராகுல்

கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசியுள்ளார். இவர் 86 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். 

18:51 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: 50 ஓவர்கள் முடிந்தது

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:25 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

16:57 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: 100 ரன்களைக் கடந்த இந்தியா

4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துவரும் இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:53 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: க்ளீன் போல்ட் ஆன ஸ்ரேயஸ் ஐயர்

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் க்ளீன் போல்ட் ஆகி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

14:45 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: ஜெய்ஸ்வால் அவுட்

இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை 17 ரன்கள் சேர்த்த நிலையில் பர்கர் பந்துவீச்சில் இழந்து வெளியேறினார். 

14:44 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: ரோகித் சர்மா அவுட்

ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 5 ரன்களுக்கு ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார். 

14:07 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: முதல் ஓவர் முடிவில் இந்திய அணி - 4/0

முதல் ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. 

13:46 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி..!

டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி சோர்ஜி, டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரே, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடி

13:45 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: கணிக்கப்பட்ட இந்திய அணி..!

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

13:45 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை..! போட்டி நடைபெறுமா..?

முதல் இரண்டு நாட்களுக்கு செஞ்சூரியனில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

13:43 PM (IST)  •  26 Dec 2023

IND Vs SA 1st Test LIVE Score: மோசமான வானிலை.. டாஸ் போடுவதில் தாமதம்.. வெயிட்டிங்கில் இந்தியா - தென்னாப்பிரிக்கா..!

மோசமான வானிலை மற்றும் பிட்ச்சில் ஈரப்பதம் இருப்பதால் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் போட தாமதம் ஏற்பட்டுள்ளது.