IND vs SA 1st Oneday: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு பிறகு, ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 


இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 3.45 மணிக்கு லக்னோவில் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக தாமதமாக போட்டி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட பதிவில்,


மழையினால் தாமதம்! #INDvSA லக்னோ ஒருநாள் போட்டிக்கான டாஸ் மற்றும் மேட்ச்  தாமதமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 






 


அதன் அடிப்படியில், லக்னோவில் உள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கலக்கிய ரஜத் படிதார் இந்தத் தொடர் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். அணியில் யாருக்கு இடம் என்ற போட்டியில் இவர்கள் இருவருக்குள் கடுமையான போட்டி நிலவும். 


போட்டி விவரங்கள்: 


போட்டி: இந்தியா vs  தென்னாப்பிரிக்கா 1வது ODI, 2022


தேதி: வியாழக்கிழமை, அக்டோபர் 06, 2022


இடம்: பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை எங்கே பார்க்கலாம்?


இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகிறது.


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை நேரலையில் பார்க்க:


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி டிஸ்னி+ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.


ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:


ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில்,  ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகமது சிராஜ். 


ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி:


டெம்பா பவுமா (கேப்டன்), கேசவ் மகராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, வெய்ன் பார்னல், ககிசோ ரபாடா.