IND vs SA, 1st ODI, Boland Park: தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. தவான், கோலி, ஷர்துல் தாகூர் என மூவரின் அரை சதம் வீணானது. இதனால், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்ரிக்கா முன்னிலை பெற்றிருக்கிறது.


இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக கே.எல்.ராகுல் இன்று தன்னுடைய முதல் போட்டியில் இன்று களமிறங்கினார். டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பவுமா, வான் டர் டுசனின் சதங்களால் இந்திய அணி வெற்றி பெற 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்ரிக்க அணி. 


ஓப்பனர்கள் குவிண்டன் டி காக், மாலன் ஆகியோர் ஏமாற்றம் தர, பவுமா ஒன் டவுனாக களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த மார்க்கரம் ரன் அவுட்டாக வான் டர் டுசன் களமிறங்கினார். தொடக்கத்திலேயே, பும்ரா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுக்க, ஒரு ரன் அவுட்டும் ஆக, தென்னாப்ரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய பவுமா - வான் டர் டுசன் ஜோடி மெதுவாக ரன் சேர்க்க தொடங்கியது. பவுமா - வான் டர் டுசன் ஜோடி 204 ரன்கள் குவித்தனர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது தென்னாப்ரிக்க அணி.






297 ரன்களை சேஸ் செய்த இந்திய அணிக்கு, கேப்டன் ராகுல் ஏமாற்றம் அளித்தார். ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவிக்க, அவருடன் ஜோடி சேர்ந்த கோலி அவர் பங்கிற்கு அரை சதம் அடித்தார். ஆனால், தவானும், கோலியும் அவுட்டானதை அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். டெயில் எண்டராக களமிறங்கிய ஷர்துல் தாகூர் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடினர். போட்டியின் கடைசி ஓவர்களில், இந்தியா வெற்றி பெறாது என தெரிந்தவுடன், தாகூர் அரை சதம் கடந்தால் போதும் என்ற நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். 43 பந்துகளில் அரைசதத்தை கடந்தார் சர்துல் தாக்கூர். இறுதியில், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து போட்டியை இழந்தது இந்திய அணி.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண