IND vs SA 1st ODI LIVE: 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய தோல்வி... தவான், கோலி, ஷர்துலின் அரை சதங்கள் வீண்
IND vs SA 1st ODI LIVE Updates: தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் தொடர்பான உடனுக்குடன் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதலில் பந்துவீசி வரும் இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் குயின்டின் டி காக் 27 ரன்களிலும், மலான் 6 ரன்களிலும், அதிரடி வீரர் மார்க்ரம் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 21.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் மலான் பும்ரா பந்தில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக சதம் கடந்த இந்திய வீரர்கள் யார் யார்?
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் சாஹல் இடம்பெற்றுள்ளனர். இந்திய ஒருநாள் அணியில் இவர்கள் இருவரும் முதல் முறையாக ஒரே போட்டியில் களமிறங்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றுள்ளார். கடைசியாக 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் இடம்பெற்று இருந்தார்.
முதல் ஒருநாள் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியின் விவரம்:
முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம்:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Background
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக கே.எல்.ராகுல் இன்று தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்குகிறார். காயம் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் முழுநேர கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இதுவரை 84 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் தென்னாப்பிரிக்க அணி 46 போட்டிகளிலும் இந்திய அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 34 ஒருநாள் போட்டியில் விளையாடி 10 வெற்றி மற்றும் 22 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்பட்டவில்லை. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -