குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (அக்டோபர் 14) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது. இதில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு நாள் போட்டிகளில் 8 வது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.


ஜெர்ஸியை பரிசாக பெற்ற பாபர் அசாம்:


முன்னதாக, போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம் தான் கையொப்பமிட்ட ஜெர்ஸியை பரிசாக வழங்கினார். அதை பாபர் அசாம் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.  இது தொடர்பான வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இச்சூழலில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் பாபர் அசாமின் இந்த செய்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.






இதுவா நேரம்:



இது தொடர்பாக பேசிய அவர், “ இந்தியாவுக்கு எதிரான இந்த தோல்வியால் பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  பாபர் அசாம் விராட் கோலியிடம் ஜெர்ஸியை வாங்கியதை தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பி காட்டினார்கள்.


 தோல்வியால் மக்கள் சோகத்தில் இருக்கும் போது பாபர் அசாமின் இந்த செய்கை தவறானது. அதற்கான நாள் இது கிடையாது. 


 அப்படி அவர் தனது உறவினரின் மகனுக்காக கோலியிடம் ஜெர்ஸியை வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், கேமராக்களில் படாத வண்ணம் தங்கள் அறைக்கு சென்று வாங்கி இருக்கலாம் .” என்று தெரிவித்துள்ளார்.


இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் போட்டியை போட்டியாக பாருங்கள். இதில் எந்த தவறும் கிடையாது என்று வாசிக் அக்ரமுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேபோல், வெற்றியும் தோல்வியும் சகஜமான ஒன்று தான் முடிந்த அளவிற்கு அனைவருடனும் அன்புடன் இருப்போம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


 


மேலும் படிக்க: Babar Azam Birthday: பிறந்த நாளை கொண்டாடிய பாபர் ஆசம்... பூங்கொத்து கொடுத்து க்யூட்டாக சர்ப்ரைஸ் செய்த ஹசன் அலி குழந்தை!


 


மேலும் படிக்க: ENG Vs AFG Score LIVE: 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.. இங்கிலாந்தை பயமுறுத்தும் ஆப்கானிஸ்தான்!