இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதனால் போட்டி குறித்து பெரும் பரபரப்பும், பில்டப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று சந்திக்கிறது.
இன்றைய போட்டியும் பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து டி20 போட்டிகளில் இரண்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், டி 20 வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ் குறித்த விவரங்களை கீழே காணலாம்.
இதுவரை டி 20 வடிவத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை டி20 போட்டிகளை பொறுத்தவரை 6 போட்டிகள் விளையாடி அதில், இந்தியா 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20யில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள்:
- விராட் கோலி : 9 போட்டிகள் - 406 ரன்கள் (அதிகபட்ச ரன் - 78)
- யுவராஜ் சிங் : 9 போட்டிகள் - 155 ரன்கள் (அதிகபட்ச ரன் - 72)
- கவுதம் காம்பீர் : 5 போட்டிகள் - 139 ரன்கள் (அதிகபட்ச ரன் - 75)
- ரோகித் சர்மா : 10 போட்டிகள் - 110 ரன்கள் (அதிகபட்ச ரன் - 30)
- எம்.எஸ்.தோனி : 8 போட்டிகள் - 93 ரன்கள் (அதிகபட்ச ரன் - 33)
இந்திய அணிக்கு எதிராக டி20யில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் வீரர்கள்:
- முகமது ரிஸ்வான் : 3 போட்டிகள் - 193 ரன்கள் (அதிகபட்ச ரன் - 79)
- சோயிப் மாலிக் : 9 போட்டிகள் - 164 ரன்கள் (அதிகபட்ச ரன் - 57)
- முகமது ஹபீஸ் : 8 போட்டிகள் - 156 ரன்கள் (அதிகபட்ச ரன் - 61)
- உமர் அக்மல் : 6 போட்டிகள் - 103 ரன்கள் (அதிகபட்ச ரன் - 33)
- மிஸ்பா உல் ஹக் : 2 போட்டிகள் - 96 ரன்கள் (அதிகபட்ச ரன் - 53)
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: 10 (புவனேஷ்வர் குமார்)
இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: 11 (உமர் குல்)