இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் போட்டி தொடங்கும் முன்பே இந்திய அணி டாஸில்லேயே ஒரு மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்தியா-பாக் போட்டி:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் குரூப் ஏ-வின் மூன்றாவது போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோல்விகளை சந்தித்த அணி என்ற உலக சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இதையும் படிங்க: Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
12வது முறை:
ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக இப்படி டாஸில் தோல்வி அடைந்து கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்தியா ஒரு டாஸைக் கூட வெல்லவில்லை. இதற்கு முன்பு, 2011 போட்டி முதல் ஆகஸ்ட் 2013 வரை ஒருநாள் கிரிக்கெட்டில் 11 முறை டாஸை இழந்த நெதர்லாந்தின் சாதனையை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.
இரு அணிகளும் கடைசியாக 2023 உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடந்தபோட்டியில் சந்தித்தன, அதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி வங்கதேசத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
இதையும் படிங்க: ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லனான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா
பாக் அணிக்கு கடைசி வாய்ப்பு:
நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான பாகிஸ்தானுக்கு மற்றொரு தோல்வி ஏற்பட்டால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பிறகு,காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய ஃபகர் ஜமானுக்கு பதிலாக இமாம் களமிறங்குவதாக ரிஸ்வான் கூறினார் . இடது கை தொடக்க வீரரான இமாம், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.
10 ஓவர்கள் முடிவில்:
பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் நல்ல தொடக்கம் தந்தனர், ஆனால் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் அவுட்டாகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள்
பிளேயிங் XI
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் , விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , அக்சர் படேல் , கே.எல். ராகுல் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , ஹர்ஷித் ராணா , முகமது ஷமி, குல்தீப் யாதவ
பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் , சவுத் ஷகீல் , முகமது ரிஸ்வான் (கேப்டன் & wk), சல்மான் ஆகா, தயப் தாஹிர் , குஷ்தில் ஷா , ஷாஹீன் அப்ரிடி , நசீம் ஷா , ஹாரிஸ் ரவூப் மற்றும் அப்ரார் அகமது