டி20 உலக்கோப்பை தொடரில் இந்தியா, அரையிறுதிக்குச் செல்ல முடியாமல் வெளியேறியதற்கு பிறகு, முதல் தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி விலகியுள்ள நிலையில், ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி மீது அதிக எதிர்ப்பு உள்ள நிலையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இந்தநிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் டி20 போட்டியில் இந்தியாவை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.



சிராஜ் இந்த போட்டியில் 4 ஓவரில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து மிகவும் காஸ்டலியாக இருந்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 20 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் அரை சாதம் அடித்தார், கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. போட்டி நடந்துகொண்டிருக்கும்போது இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ரோஹித் சர்மா சிராஜின் தலையில் அடித்த விடியோ நெட்டிசன்கள் கண்ணில் பட்டுவிட்டது. வைரலாக பரவிய விடியோவை பார்த்து எதற்காக அடித்திருப்பார் என்று விவாதித்து வருகின்றனர்.






அந்த வீடியோவில் ரோஹித்தும் கேஎல் ராகுலும் டகவுட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் ராகுல் டிராவிட் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் சிராஜ் அமர்ந்திருக்கிறார். ரோஹித்தும் ராகுலும் பக்கத்தில் எதையோ தீவிரமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அதை சிராஜும் பார்த்துக் கொண்டிருக்கிறார். திடீரென ரோஹித் சிராஜின் தலையில் அடிக்கிறார். இந்த விடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் 2008 ஐபிஎல்-இல் ஹர்பஜன் சிங் ஸ்ரீஷாந்த்தை அடித்ததோடு இதனை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி ரோஹித் சிராஜை அடித்ததை வைத்து பல மீம்ஸ்களும் உருவாக தொடங்கிவிட்டது. போட்டி முடிந்ததும் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டிக்குள் நுழைய முடியாதது ஒரு எதிர்பாராத தோல்வி. அதிலிருந்து மீண்டு வருவது மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.