IND vs NZ 3rd ODI Score LIVE : 90 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற இந்தியா; நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து அசத்தல்..!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 24 Jan 2023 09:03 PM
இந்தியா வெற்றி..!

மூன்றாவது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது. மூன்றாவது போட்டியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

பிராஸ்வெல் அவுட்..!

அணியை வெற்றி பெறச்செய்வார் என நியூசிலாந்துக்கு நம்பிக்கையாக இருந்த பிராஸ்வெல் குல்தீப் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

கான்வே அவுட்..!

அதிரடியாக விளையாடி 100 பந்துகளில் 138 ரன்கள் குவித்த நிலையில், உம்ரான் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளனர். 

186 ரன்கள் தேவை..!

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 22 ஓவரில் 186 ரன்கள் தேவையாக உள்ளது. 

ஷர்துல் பந்தில் வெளியேறிய பிலிப்ஸ்..!

போட்டியின் 28வது ஓவரின் 4வது பந்தில் நியூசிலாந்து அணி 200 ரன்கள் எடுத்த நிலையில் பிலிப்ஸ் ஷர்துல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

200 ரன்களைத் தொட்ட நியூசிலாந்து..!

28வது ஓவரின் இரண்டாவது பந்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்துள்ளது. 

டாம் லாதம் டக் அவுட்..!

ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டாம் லாதம் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

மிட்ஷெல் அவுட்..!

சிறப்பாக விளையாடி வந்த ஷர்துல் தக்கூர் பந்து வீச்சில் அட்டமிழந்தார்.  

சதம் விளாசிய கான்வே..!

தொடக்க ஆட்டக்காரரான கான்வே 74 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 101 ரன்கள் குவித்துள்ளார். 

15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி..!

15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. 

நிக்கோலஸ் அவுட் - ரிவியூவ் கேட்ட நியூசிலாந்து..!

போட்டியின் 15 ஓவரின் 4வது பந்தில் நிக்கோலஸ் எல்.பி.டபள்யூ. ஆக அவர் அவுட் என கள நடுவர் அறிவித்தார். அதை மறுத்து ரிவியூவ் கேட்ட நிக்கோலஸ்க்கு முடிவு அவருக்கு சாதகமாக வரவில்லை. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் 42 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். 

கான்வே அரைசதம்..!

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 42 பந்துகளைச் சந்தித்து நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 50 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி..!

10ன் ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. 

ஃபின் ஆலன் போல்ட்..!

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

களமிறங்கிய நியூசிலாந்து..!

386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. 

386 ரன்கள் எடுத்தால் வெற்றி..!

நியூசிலாந்து அணிக்கு 386 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

வெளியேறிய ஹர்திக்..!

போட்டியின் 49 ஓவரின் 4வது பந்தில் ஹர்திக் பாண்டியா கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார். இவர் 38 பந்தில் 54 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹர்திக் பாண்டியா அரைசதம்..!

அணி தடுமாறிக் கொண்டு இருக்கும் போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசியுள்ளார். 

ஷர்துல் தக்கூர் அவுட்..!

கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டு இருந்த ஷர்துல் தக்கூர் 48வது ஓவரின் இறுதிப் பந்தில் அவுட் ஆனார். 

350 ரன்களை எட்டிய இந்திய அணி..!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்தல் தகுர் உள்ளனர். 

வாஷிங்டன் சுந்தரும் அவுட்..!

ஹர்திக் பாண்டியாவுக்கு உறுதுணையாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் அவுட்டாகி வெளியேறியுள்ளார். 

சூர்யகுமார் யாதவ் அவுட்...!

நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என எதிர் பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 9 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இவர் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சூர்யகுமார் யாதவ் சிக்ஸர்..!

5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் விளாசியுள்ளார். 

இஷான் கிஷன் அவுட்..!

அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 24 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

இஷான் கிஷன் சிக்ஸர்..!

நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இஷான் கிஷன் நிதானமாக ஆடிவந்த நிலையில் 33 ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். 

250 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

போட்டியின் 32வது ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தற்போது களத்தில் இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடி வருகின்றனர். 

சுப்மன் கில் அவுட்..!

78 பந்துகளில் 5 சிக்ஸர் 13 பவுண்டரி உட்பட 112 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். 

முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்..!

தொடக்க ஜோடியான ரோகித் மற்றும் சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து அசத்தியது. 

கில்லும் சதம்..!

அதிரடியாக விளையாடி வரும் சுப்மன் கில் நாலாபுறமும் பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி சதமடித்துள்ளார். 

களமிறங்கியதும் சிக்ஸர்..!

இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி சிக்ஸர் விளாசி அதகளப்படுத்தியுள்ளார். 

ரோகித் அவுட்..!

சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ரோகித ஷர்மா, போட்டியின் 27வது ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். 

சதமடித்த ரோகித்..!

ரோகித் ஷர்மா 83 பந்துகளில் 9 பவுண்டரி 6 சிக்ஸர் விளாசி சதம் விளாசியுள்ளார். 

200 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

இந்திய அணி 25வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 200 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது. 

20 பவுண்டரி..! 10 சிக்ஸர்..!

இதுவரை இந்திய அணி சார்பில் 20 பவுண்டரியும் 10 சிக்ஸரும் அடிக்கப்படுள்ளது. தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது. இருவரும் 90 ரனகளைக் கடந்து களத்தில் உள்ளனர். 

அதிரடி காட்டும் ரோகித்..!

தொடக்க வீரர் ரோகித் ஷர்மா ஆரம்பம் முதல் அதிரடியாக 9 பவுண்டரி 6 சிக்ஸர் விளாசி 68 பந்தில் 91 ரன்கள் விளாசி சிறப்பாக விளையாடி வருகிறார். 

150 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடு வருகிறது.

அதிரடி ஆட்டம் காட்டும் ரோகித்..!

தொடக்க வீரர் ரோகித் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி வருகிறார். அவர் 51 பந்தில் 7 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 72 ரன்கள் எடுத்து தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். 

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறது. 

அரைசதம் கடந்த கில்..!

ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிவந்த சுப்மன் கில் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 8 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசியுள்ளார். 

அடுத்தடுத்து பவுண்டரி...!

போட்டியின் 10 ஓவரில் ரோகித் ஷர்மா ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி அசத்தியுள்ளார். 

50 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

அதிரடியாக விளையாடிவரும் இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்து அரைசதத்தை கடந்துள்ளது. 

7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகின்றது. 

Background

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போன்று மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 


இந்திய அணி பேட்டிங்:


இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-0 என்று கைப்பற்றி தொடரை முழுமையாக வெல்லும். அதே நேரத்தில் இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.






யார் யாருக்கு வாய்ப்பு..? 


இந்திய அணியின் தொடக்க வீரர் சும்பன் கில் சிறப்பான பார்மில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்த கில், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். கேப்டன் ரோகிஷ் சர்மாவும் இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அதே சமயம், இலங்கைக்கு எதிரான இரண்டு சதங்களும், வங்கதேச அணிக்கு எதிரான ஒரு சதம் அடித்த கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பெரிய இலக்கை எட்டவில்லை. அதோடு, நடப்பு தொடரில் பந்துவீச்சில் சிரப்பாக செயல்பட்ட சிராஜ் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு, உம்ரான் மாலிக் மற்றும் சாஹல் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


டி20 பார்மேட்டில் நல்ல பார்மில் உள்ள சூர்யகுமார் யாதவ் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மிடில் ஆர்டரில் உள்ள ஹர்திக் பாண்டியாவும் தான் யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 


ஒயிட் வாஷை தடுக்குமா நியூசிலாந்து..? 


இந்தியா இந்த போட்டியில் வெற்றிபெற்று ஒயிட் வாஷ் செய்வதை தடுக்க நியூசிலாந்து கடுமையாக போராடும். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த தொடரில் இல்லாத சூழல் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக உள்ளது. நியூசிலாந்தின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் கடந்த 30 இன்னிங்ஸ்களில் ஏழுமுறை மட்டும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். நடப்பு தொடரில் மைக்கேல் பிரேஸ் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்த போட்டியில் ஹென்றி ஷ்ப்லேவிற்கு மாற்றாக ஜேகப் டஃபிக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் 


நியூசிலாந்து அணி:


ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஜேகப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.