IND vs NZ 2nd ODI Score Live: அமிரட்டல் பவுலிங்.. அசத்தல் பேட்டிங்.. தொடரை கைப்பற்றியது இந்தியா...!

IND vs NZ 2nd ODI Score Live: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகள் குறித்து ஏ.பி.பி நாடு தளத்தில் இங்கே காணலாம்.

ABP NADU Last Updated: 21 Jan 2023 06:25 PM
மிரட்டல் பவுலிங்.. அசத்தல் பேட்டிங்.. தொடரை கைப்பற்றியது இந்தியா...!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

அபார அரைசதம் விளாசிய ரோகித்சர்மா அவுட்..! வெற்றியின் விளிம்பில் இந்தியா..!

இந்திய அணிக்காக அபாரமாக ஆடி அரரைசதம் விளாசிய ரோகித்சர்மா 51 ரன்களில் அவுட்டாகினார். இந்திய அணி தற்போது 77 ரன்களுடன் ஆடி வருகிறது.

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர்

109 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 52 ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 38 ரன்களை விளாசியுள்ளார்.

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா..! அதிரடி காட்டும் ரோகித்..!

109 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணிக்கு ரோகித்சர்மா - சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். ரோகித்சர்மா அதிரடியாக ஆடி வருகிறார்.

பவுலிங்கில் மிரட்டிய இந்தியா..! 108 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து..!

இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. 

9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து - இந்தியா மிரட்டல் பவுலிங்

இந்திய அணிக்கு எதிராக தடுமாறி வரும் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

மீண்டும் ஒரு விக்கெட்..

பெர்கூசன் வந்த வேகத்திலேயே வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்ச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

பிலிப்ஸ் அவுட்

இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய பிலிப்ஸ், 36 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டானார். இதையடுத்து நியூசிலாந்து அணி 103 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்த ஹர்திக் பாண்ட்யா

ஆரம்பம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட, சாண்ட்னர் 27 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா பந்துவீச்சில் போல்ட் ஆனார். சாண்ட்னர் - பிலிப்ஸ் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 47 ரன்களை சேர்த்தது.

தடுமாறும் நியூசிலாந்து..! காப்பாற்றுவார்களா சான்ட்னர் - பிலிப்ஸ் ஜோடி..?

இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நியூசிலாந்து அணிக்காக மிட்செல் சான்ட்னர் - பிலிப்ஸ் பொறுப்புடன் ஆடி வருகின்றனர். 

ஆறு விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரேஸ்வெல், இன்றைய போட்டியில் 22 ரன்கள் எடுத்து இருந்த போது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து..! 100 ரன்களை கடக்குமா..?

இந்திய அணிக்கு எதிராக கடந்த போட்டியில் அதிரடி சதம் அடித்த ப்ராஸ்வெல் 22 ரன்களுக்கு அவுட்டாகியுள்ளார். இதனால், நியூசிலாந்து அணி 6வது விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

பெவிலியன் திரும்பிய பாதி நியூசிலாந்து அணி

கேப்டன் லாதம் 17 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தாகூர் பந்து வீச்சில் அவுட்டானர். இதன் மூலம், 15 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறி வருகிறது.

பாண்ட்யா பந்துவீச்சில் கான்வே காலி..

பாண்ட்யா பந்துவீச்சில் காட் & போல்ட் முறையில் கான்வே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

மூன்றாவது விக்கெட்..!

போட்டியின் 7 வது ஓவரின் முதல் பந்திலேயே மிட்ஷ்லெல் விக்கெட்டை வீழ்த்தி வந்த வேகத்தில் அவரை பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார் முகமது ஷமி. 

நிக்கோலஸ் அவுட்..!

போட்டியின் 6வது ஓவரில் நிகோல்ஸ் முகமது சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடன் கேட்ச் ஆகி அவுட்டாகி வெளியேறினார். அவர் 20 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்து இருந்த நிலையில் அவுட்டானார். 

5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி..!

5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு எட்டு ரன்கள் எடுத்துள்ளது. 

விக்கெட்..!

ரன் கணக்கை தொடங்கும் முன்பே விக்கெட்டை இழந்த நியூசிலாந்து. முதல் ஓவரின் 5வது பந்தில் போல்டாகி வெளியேறினார் ஆலன். 

களமிறங்கிய நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆலன் மற்றும் கான்வே நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர். இந்திய அணியின் முகமது ஷமி முதல் ஓவரை வீசுகிறார். 

நியூசிலாந்து அணி..!

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்

இந்தியா அணி..!

 ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு..!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. 

Background

IND vs NZ 2nd ODI Score Live: 


இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடக்கவுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


நியூசிலாந்து சுற்றுப்பயணம் 


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில்  கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்துடன் 349 ரன்கள் குவித்த போதும் போராடியே வெற்றி பெற்றது. 






அதற்கு காரணம், இந்திய அணியின் பந்துவீச்சு பிற்பாதியில் சுத்தமாக எடுபடாமல் போனது தான். முதல் பாதியில் இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 110 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் பிரேஸ்வெல் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை மீட்டெடுக்க போராடினார். சதமடித்து அசத்திய அவர், இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் தோல்வி பயத்தை உண்டாக்கினார். 


இன்று 2வது போட்டி 


இந்நிலையில் இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைநகர் ராய்ப்பூரில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி, தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும்  தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். 


இரு அணிகளும் எப்படி? 


இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் முதல் போட்டியில் ஜொலிக்கவில்லை. குறிப்பாக மிடில் வரிசை இந்திய அணிக்கு சற்று பலவீனமாகவே உள்ளது. பந்துவீச்சிலும் கடைசி கட்டத்தில் சொதப்புவது எதிரணிகளுக்கு பலமாக மாறுகிறது. இவற்றையெல்லாம் இந்த போட்டியில் இந்திய அணி சரி செய்யும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 


அதேசமயம்  நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்கள் இல்லாவிட்டாலும் முதல் போட்டியில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை அளித்தது. நியூசிலாந்து அணி இதுவரை இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. இன்றைய போட்டியில் அதனை மாற்றி காட்டுவதற்கான வாய்ப்பில் நியூசிலாந்து மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி பரபரப்பு பஞ்சமிருக்காது என்பது நிச்சயம். 


முதல் போட்டி 


ராய்ப்பூர் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடப்பது இதுவே முதல்முறையாகும். அதனால் அங்கிருக்கும் சுமார் 60 ஆயிரம் இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.  ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 114 முறை மோதியுள்ளது.இதில் 56 முறை இந்தியாவும், 50 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 7 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.