ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் டி20 போட்டியானது வருகிற 18 ம் தேதி நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டனில் நடைபெற இருக்கிறது.
டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். மேலும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில், இந்தியா - நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நேற்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனும் கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தினர். அப்போது எதிர்பாரத விதமாக காற்றின் வேகத்தால் கோப்பை வைக்கப்பட்டிருந்த டேபிள் ஆட தொடங்கியது. இதனால் கோப்பை விழப்போகவே, ட்ரஸை சரி செய்துகொண்டு இருந்த ஹர்திக் பாண்டியா டக்கென்று ஒரு கையால் பிடிக்க முயன்றார். உடனே சூதாரித்துக்கொண்ட கேன் வில்லியம்சன் லாபகமாக பிடித்தார். இதை வீடியோவாக பதிவு செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் அதை எடுத்து கொள்கிறேன்” என பதிவிட்டு இருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 இந்திய அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்& விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்& விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, பிளேர் டிக்னர்
இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி
நாள் | போட்டி விவரம் | நடைபெறும் இடம் | நேரம் |
டி20 போட்டி | |||
Nov 18, 2022 | IND vs NZ, 1st T20I | ஸ்கை ஸ்டேடியம், வெலிங்டன் | மதியம் 12:00 |
Nov 20, 2022 | IND vs NZ, 2nd T20I | பே ஓவல், மவுன்கானுய் மலை | மதியம் 12:00 |
Nov 22, 2022 | IND vs NZ, 3rd T20I | மெக்லீன் பார்க், நேப்பியர் | மதியம் 12:00 |
ஒருநாள் போட்டி | |||
Nov 25, 2022 | IND vs NZ, 1st ODI | ஈடன் பார்க், ஆக்லாந்து | மாலை 7:00 |
Nov 27, 2022 | IND vs NZ, 2nd ODI | செடான் பார்க், ஹாமில்டன் | மாலை 7:00 |
Nov 30, 2022 | IND vs NZ, 3rd ODI | ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச் | மாலை 7:00 |