நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களில் சுருண்டது.
இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசினார் இளம் வீரர் தீபக் ஹூடா. 


தீபக்ஹூடா அசத்தல்:


192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சாவலை அளித்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
குறிப்பாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19 ஆவது ஓவரை வீசிய தீபக் ஹூடா அந்த ஓவரின் 2ஆவது பந்தில் இஷ் சோதியை ஆட்டமிழக்கச் செய்தார்.


Indian Cricket Team: ஒரே ஆண்டில் இத்தனை முறையா...? இந்திய கிரிக்கெட் அணியின் புதிய உலக சாதனை..!


அதைத்தொடர்ந்து அடுத்த பந்தில் சவுதீயை பெவிலியன் திரும்பச் செய்தார். அதே ஓவரின் 5வது பந்தில் மில்னே விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். முன்னதாக, 13ஆவது ஓவரில் டாரில் மிட்செல் விக்கெட்டையும் கைப்பற்றினார். மொத்தம் 2.5 ஓவர்களே வீசிய தீபக் ஹூடா நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பேக் டூ பேக் அனுப்ப முக்கிய பந்துவீச்சாளராக இன்று உருவெடுத்தார் தீபக் ஹூடா.






மொத்தம் 2.5 ஓவர்கள் வீசி 10 ரன்களே விட்டுக்கொடுத்து அவர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் தீபக் ஹூடா.  அவரது எக்கானமி ரேட் 3.50 ஆக இருந்தது.  இதன்மூலம், நியூசிலாந்து மண்ணில் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை பெற்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.






புதிய சாதனை :


இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டியதே சாதனையாக இருந்துவந்தது. அதில் ஒரு ஓவரை மெய்டன் ஓவராகவும் பும்ரா வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை 62 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியுள்ளது. 
2009 இல் ஆஸ்திரேலிய அணி 61 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.  இந்த ஆண்டில் இதுவரை 39 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியுள்ளது. இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டம் தான் இந்திய அணிக்கு நடப்பாண்டில் 39வது ஆட்டம் ஆகும்.