IND vs NZ 3rd Test: நியூசிலாந்து உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்று, உள்ளூர் மண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட்-வாஷ் ஆவதை தடுக்க போராடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒயிட்-வாஷை தடுக்குமா இந்தியா?
வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியின் நேரலையை, ரசிகர்கள் தொலைக்காட்சியின் ஸ்போர்ட்ஸ் 18 அலைவரிசையிலும், ஒடிடிய்ல் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். குறைந்தது 3 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி இதுவரை ஒயிட் வாஷ் ஆனதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000வது ஆண்டில் உள்ளூரில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரை, 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா இழந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இந்திய அணியின் மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது இதுவே முதல்முறையாகும்.
WTC இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?
சொந்த மண்ணில் பெற்ற மோசமான தோல்விகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வருவதற்கான இந்தியாவின் வாய்ப்புகளை கடுமையாக்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க இந்திய அணி இந்த சுழற்சியில் மீதமுள்ள ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவேளை, மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால், இரண்டு இடங்களுக்கு மற்ற போட்டிகளின் முடிவுகளை சார்ந்திருக்க வேண்டும்.
முன்னதாக, புள்ளிப் பட்டியலில் முதல்-இரண்டு இடத்தைப் பெறுவதற்கும், 2025 WTC இறுதிப் போட்டிக்கு வருவதற்கும், சொந்த அணி மும்பையில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, வரவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் டிராபி மோதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது.
இந்த தொடரில் பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பேட்டிங் மிக மோசமாக அமைந்துள்ளது. குறிப்பாக கேப்டன் ரோகித் மற்றும் நட்சத்திர வீரர் கோலியின் மோசமான ஃபார்ம் இந்தியாவிற்கு பெரும் பின்னடவாக உள்ளது.
உத்தேச அணிகள் விவரம்:
இந்தியா: ரிஷப் பண்ட், ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், எஸ்என் கான், ஜடேஜா, பும்ரா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்
நியூசிலாந்து: டாம் ப்ளூன்டெல், டெவோன் கான்வே, டாம் லாதம், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், டபிள்யூஏ யங், மிட்செல், மிட்செல் சான்ட்னர், வில்லியம் ஓ'ரூர்க், டிம் சவுத்தி, ஏய் படேல்
மைதானம் எப்படி?
இந்தியா ஒரு ரேங்க் டர்னரைக் கேட்டதாக வதந்திகள் இருந்ததால், சமீபத்திய அறிக்கைகள் வான்கடே டிராக் முற்றிலுமாக சுழலுக்கு ஏற்ற டிராக்காக இருக்காது என்று கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தலாம். முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.