Ind vs NZ 3rd T20 Match Live :நியூசிலாந்து அணியை 111 ரன்களுக்கு சுருட்டு இந்திய அணி அபார வெற்றி
நியூசிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 68/3
185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாகல் வீசிய 11 ஓவரில் அடித்து ஆடிய மார்டின் கப்டில் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
நியூசிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான 3 வது டி 20 போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்டில் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி 8 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்து உள்ளது. மார்ட்டின் கப்டில் 25 பந்துகளில் 35 ரன்களுடனும் தனி ஒருவராக போராடி வருகிறார்.
நியூசிலாந்து அணி 5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களுடன் தடுமாறி வருகிறது. மார்ட்டின் கப்டில் 16 பந்துகளில் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.
3 வது ஓவர் வீசிய அக்சர் பட்டேல்,நியூசிலாந்து பேட்ஸ்மேன் மிட்சல் மற்றும் சேப்மேனை வெளியேற்றி அசத்தியுள்ளார்.
மார்ட்டின் கப்டில் 6 பந்துகளில் 16 ரன்களுடனும், மிட்சல் 5 பந்துகளில் 5 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஹர்ஷல் பட்டேல், பெர்குசன் வீசிய 18.1 முதல் பந்தே சிக்ஸர் அடித்து 18 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய தீபக் சாகர் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஹர்ஷல் பட்டேல், பெர்குசன் வீசிய 18. 1 முதல் பந்தே சிக்ஸர் அடித்து 18 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.
ஹர்ஷல் பட்டேல் 7 பந்துகளில் 11 ரன்கள் அடித்து இந்திய அணி 150 ரன்களை கடக்க உதவி செய்தார்.
இந்திய அணியின் ரன் இலக்கை உயர்த்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 20 ரன்கள் அடித்து போல்ட் வீசிய 16 வது ஓவரில் வெளியேறினார். தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் 25 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தார்.
ஷ்ரேயஸ் ஐயர் 15 பந்துகளில் 21 ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 13 பந்துகளில் 19 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களில் சோதி பந்தில் அவுட்டானார்.
டி20 போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச அரை சதம் என்ற சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்
சூர்யா குமார் யாதவ் 4 பந்துகளுக்கு ரன் இலக்கை தொடங்காமல் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகி நடையை கட்டினார். இந்திய அணி 10 ஓவர் முடிவில் 90/3 ரன்கள் எடுத்துள்ளது.
இஷான் கிஷன் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து விக்கெட் கீப்பர் செய்பெர்த்திடம் கேட்சானர்.
இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 வது டி 20 போட்டியில் இந்திய அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்ப்பு
Background
Ind vs NZ 3rd T20 International, Eden Garden:
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டியில் அஸ்வின் மற்றும் கே. எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சாகலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -