இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரஹானே, ஜடேஜா காயம் காரணமாக விலகனர். அவர்களுக்கு பதிலாக கேப்டன் கோலியும், ஜெயந்த் யாதவும் களமிறங்கினர். டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.


இந்தியாவின் இன்னிங்சை தொடங்கிய மயங்க் அகர்வால் ஆட்டம் தொடங்கியது முதல் நிதானமாகவும், அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசினார். ஒருமுனையில் சுப்மன்கில், புஜாரா, விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் என்று விக்கெட்டுகள் விழுந்தாலும், மயங்க் அகர்வால் மட்டும் தனி ஆளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  197 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 13 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 100 ரன்களை எடுத்தார். சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் தொடர்ந்து ஆடி வருகிறார். அவருடன் கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடிய விருத்திமான் சஹாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 


முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 70 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், விருத்திமான் சஹா 25 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். 


இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில்விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இந்திய அணி கேப்டனாக ரகானே செயல்பட்டார். இந்த போட்டியானது டிராவில் முடிந்தது. மும்பையில் தற்போது நடந்து வரும் 2 வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். 



இதேபோல், நியூசிலாந்து அணியில் கான்பூர் முதல் டெஸ்ட் போட்டிக்கு வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்டார். வில்லியம்சனுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தற்போது டாம் லாதம் கேப்டனாக செயல்படுகிறது. இதன் மூலம், 132 ஆண்டுகளுக்கு பின்னர் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டு அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.


இதற்கு முன்னதாக, கடந்த 1889 ம் ஆண்டு இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு ஓவன் டன்னல், வில்லியம் மில்டன் கேப்டன்களாகவும், இங்கிலாந்து அணிக்கு ஆப்ரே ஸ்மித், மான்டி பவுடன் ஆகியோர் கேப்டன்களாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண