IND vs NZ 2nd T20 LIVE: தீபக்ஹூடா அபார பவுலிங்..! 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
IND vs NZ 2nd T20 LIVE Updates: அதிரடியாக ஆடி வந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.
நியூசி., கேப்டன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் வீசிய பந்தில் அவர் போல்டு ஆனார்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார்.
17 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 11 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சான்ட்னர் விக்கெட்டை வீழ்த்தினார்.
14 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 91 ரன்கள் எடுத்துள்ளது. 36 பந்துகளில் 101 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
மிட்செல் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களம் புகுந்த நீஷம், சஹல் பந்துவீச்சை தூக்கி அடித்தார். அது இஷான் கிஷன் கைகளில் சென்றது. இதையடுத்து ரன்கள் எதுவுமின்றி பெவிலியன் திரும்பினார் நீஷம்.
தீபக் ஹூடா வீசிய 13 ஆவது ஓவரில் டாரில் மிட்செல் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
சஹல் பந்துவீச்சில் கிலென் பிலிப்ஸ் போல்டு ஆகி ஆட்டமிழந்தார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பதிவு செய்து அசத்தல் தொடக்கம் கொடுத்த பிலிப்ஸ் ஆட்டமிழந்து நியூசி., ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து. கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி வருகிறார்.
வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டெவான் கான்வே ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார்.
புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார்.
டிம் சவுதி வீசிய போட்டியின் கடைசி ஓவரில் ஹர்திக், தீபக் ஹூட, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடி வந்த சூர்ய குமார் யாதவ் 11 ஃபோர் 7 சிக்ஸர் என 51 பந்தில் 111 ரன்கள் விளாசியுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் 6 சிக்ஸர் 7 ஃபோர் உட்பட 44 பந்துகளில் 88 ரன்கள் விளாசியுள்ளார்.
அதிரடியாக ஆடி வந்த சூர்ய குமார் யாதவ் 32 பந்துகளில் 5 ஃபோர் 2 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் விளாசினார்.
பெர்குசன் பந்தை எதிர்கொள்ளும் போது ஸ்ரேயஸ் ஐயர் ஹி விக்கெட் ஆகி வெளியேறினார். அவர் 9 பந்தில் ஒரு ஃபோர் ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டனும் அதிரடி மன்னனுமான ஹர்திக் பாண்டியா களம் இறங்கியுள்ளார்.
பத்து ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அதிரடியாக ஆடி வந்த இஷான் கிஷன் 31 பந்தில் 5ஃபோர் ஒரு சிக்ஸர் உட்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் தற்போது களம் இறங்கியுள்ளார்.
மழைக்குப் பின் தொடங்கிய போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது.
இரண்டாவது டி20 போட்டியில் 6.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் விளாசியுள்ளது. களத்தில் தற்போது தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷனும், சூர்ய குமார் யாதவும் இருக்கிறார்கள். இஷான் 28 ரன்னிலும், சூர்யா 6 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி அதிரடியாக விளையாடி வந்த நிலையில் போட்டி நடக்கும் பே ஓவல் மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பொழிவதால், போட்டி தடைபட்டுள்ளது. 6.4 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் விளாசியுள்ளது.
சூர்ய குமார் யாதவ் களமிறங்கிய பின்னர் இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது. 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்கம் முதலே தடுமாறி வந்த ரிஷப் பந்த் 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து, பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். சூர்ய குமார் யாதவ் களம் இறங்கியுள்ளார்.
இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீச திணறும் நியூசிலாந்து அணி பவுலர்கள். மிலைன் வீசிய இரண்டாவது ஓவரில் மட்டும் 7 எக்ஸ்ட்ரா ரன்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
அனுபவம் வாய்ந்த நியூசிலாந்துக்கு எதிராக இளம் இந்திய அணி நிதானமாக தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்தியாவின் சார்பில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் (ரிஷப் பந்த், இஷன் கிஷன்) இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி பேட்டிங்கை தொடங்கவுள்ளது.
Background
IND vs NZ 2nd T20; இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று மதியம் நண்பகல் 12 மணிக்கு பே ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு நியூசிலாந்து நாட்டில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ள இரண்டாவது டி20 போட்டியானது தொடரை வெல்ல இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது.
டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின்மூலம் ஒட்டுமொத்த பார்வையும் இளம் இந்திய வீரர்களின் மீது திரும்பியுள்ளது. இன்றைய போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய உம்ரான் மாலிக் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இணைந்து பந்துவீச இருக்கின்றனர்.
அதேபோல், நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் தங்கள் திறமைகளை இந்த தொடரின் மூலம் நிரூபிக்க மீண்டு ஒரு நல்வாய்ப்பு எனலாம். மேலும், சுப்மன் கில் முதல் முறையாக டி20 தொடருக்கான அழைப்பை பெற்றுள்ளார்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணிக்கு ரிஷப் பந்த் துணை கேப்டனாக உள்ளார். வருங்கால இந்திய அணியை கருத்தில்கொண்டு தற்போது மிகப்பெரிய மாற்றங்களை பிசிசிஐ செய்து வருகிறது. இந்திய அணியின் தேர்வுக் குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இளம் படை மீது பெரும் கவனம் குவிந்துள்ளது.
இதுவரை நேருக்குநேர்:
விளையாடிய போட்டிகள்: 22
இந்தியா வெற்றி: 11
நியூசிலாந்து வெற்றி: 9
முடிவு இல்லை: 2
ரெக்கார்ட்ஸ்:
- நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் : ரோகித் சர்மா (511)
- இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள் : கொலின் முன்ரோ (426)
அதிக விக்கெட்கள் :
- ஜஸ்பிரித் பும்ரா - 12
- இஷ் சோதி - 20
இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -