சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 38வது முறையாக டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்திருக்கிறார் விராட் கோலி. இதன் மூலம் நியூசிலாந்து வீரர் டிம் சவுதியின் மோசமான சாதனையைத் தான் விராட் கோலி சமன் செய்துள்ளார்.


இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட்:


இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், இரண்டாவது நாளான இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. மழை பெய்துள்ள சூழலில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். நிதானமாகவே இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.


மோசமான சாதனை படைத்த விராட் கோலி:


ரோகித் சர்மா பந்தை விளாச முற்பட்டபோது டிம் சவுதி பந்தில் போல்டானார். அவர் 16 பந்துகளில் 2 ரன்களுடன் போல்டாகி வெளியேறினார். 9 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணிக்காக விராட் கோலி களமிறங்கினார். அவர் ரன் எடுப்பதற்கு முன்பே வில்லியம் ஓரோர்க் பந்தில் அடித்த பந்தை கிளென் பிலிப்ஸ் பாய்ந்து அபாரமாக கேட்ச் பிடித்தார்.


இதனால், விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 38 வது முறையாக டக் அவு ஆனதன் மூலம் நியூசிலாந்து வீரர் டிம் சவுதியின் மோசமான சாதனையைத் தான் விராட் கோலி சமன் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 33 முறை டக் அவுட் ஆனதன் மூலம் ரோஹித் ஷர்மா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 


இந்தியா:


ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் , விராட் கோலி, கே.எல். ராகுல் , சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா , ரவிச்சந்திரன் அஷ்வின் , குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா , முகமது சிராஜ்


நியூசிலாந்து: 


டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே , வில் யங் , ரச்சின் ரவீந்திரா , டேரில் மிட்செல் , டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மாட் ஹென்றி , டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல் , வில்லியம் ஓ'ரூர்க் .