மழையால் தடைபட்ட ஆட்டம்:


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி  டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரில் தொடங்குகிறது. பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், போட்டி தொடங்கும் நாளான இன்றும் வானிலை காலை முதலே மோசமாக இருந்து வந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தடைபட்டுள்ளது.


ரோஹித் ஷர்மா என்ன முடிவு எடுக்க வேண்டும்?


இதன் காரணமாக இந்த முதலாவது டெஸ்ட் போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்? ரோஹித் ஷர்மா என்ன முடிவு எடுக்க வேண்டும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.


பெங்களூரில் குளிர்ந்த கால சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக வானம் மேகமூட்டத்துடன் இருப்பதினால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் இந்த மைதானத்தில் மழைக்கு பிறகு சுழற்பந்து வீச்சு எடுபடாது. 


ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் வைத்துக்கொண்டு நான்கு வேகப்பந்து வீச்சாளுடன் விளையாடலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ரோஹித் சர்மா போட்டியின் சூழலை கணக்கில் கொண்டே முடிவெடுப்பார் என்பதனால் அவரது முடிவு என்னவாக இருக்கும்? என்று தெரியவில்லை.


ஆனாலும் இந்திய அணி இந்த போட்டியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நிச்சயம் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதேபோன்று முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் குறைந்தது 250 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.