இந்திய அணி இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தை முடித்துள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் நியூசிலாந்துடன் ஆட உள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி ஏற்கனவே இந்தியாவிற்கு வந்துவிட்டது.


இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் ஹைதரபாத்திற்கு சென்று ஹைதரபாத் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.





இந்திய அணியைப் பொறுத்தவரையில் சொந்த நாட்டில் ஆடுவது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளதால், இந்திய அணி தன்னம்பிக்கையுடன் களமிறங்கும். இந்திய அணிக்கு பெரும் பலமாக மீண்டும் விராட்கோலி மாறியுள்ளார்.


ரோகித்சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் சுப்மன்கில், இஷான்கிஷான், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ்,  துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பெரும் பலமாக அமைந்துள்ளனர்.  பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் வேகத்தில் பலமாக உள்ளனர். சுழலில் குல்தீப்யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர்.


வில்லியம்சன் இல்லாததால் டாம் லாதம் தலைமையில்  நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு பலமாக ஆலன், கான்வே, பிலிப்ஸ், ப்ரேஸ்வெல், சாப்மென் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சிற்கு பலமாக ஆடம் மிலனே, மேட் ஹென்றி, பெர்குசன் உள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய விராட்கோலி இந்த தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பா்க்கலாம்.




இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 113 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 55 போட்டியில் இந்தியாவும், 50 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் இந்திய அணி தலா 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


போட்டி நடைபெற உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் இதுவரை 6 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 3 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியும், இரண்டாவதாக பேட் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் சராசரியாக 277 ரன்களை அதிகபட்சமாக குவிக்கலாம். குறைந்தபட்சமாக சராசரியாக 250 ரன்களை எடுக்கலாம்.


ஹைதரபாத் மைதானத்தில் அதிகபட்சமாக இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 350 ரன்களை விளாசியுள்ளது. குறைந்தபட்சமாக இங்கிலாந்த இந்தியாவிற்கு எதிராக 174 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு எதிராக 252 ரன்களை சேஸ் செய்துள்ளது. வானிலை தெளிவாக இருப்பதால் நாளை மழை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Virat Kohli: சாதனை மட்டும்தான் என் சிந்தனையா..? எப்போதும் அப்படி விளையாடியதில்லை.. மனம் திறந்த விராட்கோலி..!


மேலும் படிக்க : Virat Kohli: ஐ.பி.எல். தொடருக்கு முன்பே சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட்கோலி...? வரலாறு சாத்தியமா...?