IND vs PAK LIVE Score: மிரட்டிய இந்திய பவுலர்களால் மீண்டெழுந்த இந்திய அணி.. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IND vs PAK LIVE Score, T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளுங்கள்.

முகேஷ் Last Updated: 10 Jun 2024 01:13 AM
IND vs PAK LIVE Score: மிரட்டிய இந்திய பவுலர்களால் மீண்டெழுந்த இந்திய அணி.. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

IND vs PAK LIVE Score: இப்திகார் அகமது அவுட்!

5 ரன்கள் மட்டுமே எடுத்து இப்திகார் அகமது விக்கெட்டை பறிகொடுத்தார்.

IND vs PAK LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs PAK LIVE Score: ஷதாப் கான் அவுட்!

இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஷதாப் கான் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

IND vs PAK LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs PAK LIVE Score: முஹமது ரிஸ்வான் அவுட்!

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணி வீரர் முஹமது ரிஸ்வான் 31 பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

IND vs PAK LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs PAK LIVE Score: பஹர் ஷமான் அவுட்!

8 பந்துகள் களத்தில் நின்ற பஹர் ஷமான் 13 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்

IND vs PAK LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs PAK LIVE Score: உஸ்மான் கான் அவுட்!

பாகிஸ்தான் அணி வீரர் உஸ்மான் கான்15 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

IND vs PAK LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs PAK LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

IND vs PAK LIVE Score: பாபர் அசாம் அவுட்!

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

IND vs PAK LIVE Score: 2 ஓவர்கள் முடிந்தது!

2 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்களுடன் விளையாடி வருகிறது.

IND vs PAK LIVE Score: 119 ரன்களில் முடங்கிய இந்திய அணி.. இலக்கை எளிதாக துரத்துமா பாகிஸ்தான்..?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 119 ரன்களில் ஆல் அவுட்டானது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. 

IND vs PAK LIVE Score: 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 106 ரன்கள்.. 150 ரன்களை தொடுமா..?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs PAK LIVE Score: 7 விக்கெட்களை இழந்த இந்திய அணி.. வந்தவேகத்தில் வெளியேறிய ஜடேஜா..!

14.2 ஓவர்களில் இந்திய அணி 96 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 15 வது ஓவர் வீசிய அமீர் அடுத்தடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா விக்கெட்களை வீழ்த்தினார். 

IND vs PAK LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி.. 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs PAK LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களுடன் விளையாடி வருகிறது.

IND vs PAK LIVE Score: அக்ஸர் படேல் அவுட்!

அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

IND vs PAK LIVE Score: பவர் பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள்..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs PAK LIVE Score: 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி.. 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள்..1

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs PAK LIVE Score: கேப்டன் ரோஹித் சர்மாவும் அவுட்.. இந்திய அணி திணறலா..?

12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா, ஷஹீன் அப்ரிடி பந்தில் ஹரிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

IND vs PAK LIVE Score: ’இம்ரான் கானை விடுதலை செய்'..ஸ்டேடியத்திற்கு மேலே பறந்த விமானம்..!

டி 20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் ஸ்டேடியத்திற்கு மேலே 'இம்ரான் கானை விடுதலை செய்' என்ற செய்தியுடன் கூடிய விமானம் பறந்து வருகிறது. 





IND vs PAK LIVE Score: 4 ரன்களுடன் காலியான விராட் கோலி.. இந்திய ரசிகர்களிடன் அடங்கிய ஆர்ப்பரிப்பு

நஷீம் ஷா வீசிய 2 வது ஓவரில் 4 ரன்கள் அடித்த விராட் கோலி, அதே ஓவரில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.

IND vs PAK LIVE Score: மீண்டும் குறுக்கே வந்த மழை.. முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்த இந்திய அணி..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் ஓவரில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 ரன்கள் எடுத்துள்ளது. அதற்குள் மீண்டும் மழை வர போட்டி தடைப்பட்டது. 

IND vs PAK LIVE Score: தொடங்கியது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போர்.. அட்டகாச தொடக்கம்..!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழைக்கு நடுவே தொடங்கியது. ஷஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரை அடிக்க தொடங்கினார் ரோஹித் சர்மா.

IND vs PAK LIVE Score: இந்தியா - பாகிஸ்தான் இடையே வந்து வந்து போகும் மழை.. போட்டி தொடங்க தாமதம்..!

நியூயார்க்கில் மீண்டும் பெய்த மழை நின்றுவிட்டது. இப்போது இந்திய நேரப்படி 8.50க்கு ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை.  

IND vs PAK LIVE Score: 8.30 மணிக்கு தொடங்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி..! ஓவர்கள் குறைப்பா..?

2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் மழை காரணமாக டாஸ் 8 மணிக்கு போடப்பட்டதால், 8.30 மணிக்கு போட்டியானது தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படாது என்பது நல்ல விஷயம். 

IND vs PAK LIVE Score: விளையாடும் பாகிஸ்தான் அணி விவரம்..!

பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), உஸ்மான் கான், ஃபகார் ஜமான், ஷதாப் கான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது அமீர்

IND vs PAK LIVE Score: விளையாடும் இந்திய அணி விவரம்..!

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

IND vs PAK LIVE Score: பேட்டிங்கில் அசத்துமா இந்திய அணி..? டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு..!

2024 டி20 உலகக் கோப்பையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. 

IND vs PAK LIVE Score: நின்றது மழை..! இன்னும் சற்று நேரத்தில் டாஸ்..

நியூயார்க்கில் தற்போது மழை நின்றுவிட்டதால் டாஸ் இன்னும் சிறிது நேரத்தில் போடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மூடப்பட்ட ஆடுகளம் இன்னும் திறக்கப்படவில்லை. 

IND vs PAK LIVE Score: 7 மணிமுதல் மழை பெய்ததால் மூடப்பட்ட ஆடுகளம்..!

 நியூயார்க்கில் இந்திய நேரப்படி இரவு ஏழு மணியளவில் மழை பெய்யத் தொடங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தற்போது, ​​ஆடுகளம் மூடப்பட்டுள்ளது.





IND vs PAK LIVE Score: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.. நடைபெறுமா இந்தியா - பாகிஸ்தான் போட்டி..?

2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்னதாக, மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Background

2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்னதாக, மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 


இன்று மோதும் இந்தியா - பாகிஸ்தான்:


இந்த சூழலில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று நடக்கிறது. சாதாரணமாக இரு நாட்டு அணிகளும் மோதிக்கொண்டாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படும், அதுவும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் இரு அணிகளும் மோதிக் கொண்டால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து காணப்படும்.


இந்த சூழலில், நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இரு அணிகளும் முதன்முறையாக மோதுகின்றன. இந்த தொடர் தொடங்கியது முதலே அமெரிக்காவின் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சவாலானதாக அமைந்து வருகிறது.


பேட்டிங் எப்படி?


இதனால், நியூயார்க் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையுமா? பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் பலமாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர்.


கடந்த போட்டியில் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டானாலும், கடந்த டி20 உலகக்கோப்பையைப் போல நடப்பு உலகக்கோப்பையைத் தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். கிடைக்கும் வாய்ப்பை இளம் வீரரான ஷிவம் துபே சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் பலமாக முகமது ரிஸ்வான், பாபர் அசாம், உஸ்மான் கான், பக்கர் ஜமான், ஷதாப்கான் உள்ளனர். அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாபர் அசாம், ஷதாப் கான் மட்டுமே சிறப்பாக ஆடினார். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இப்திகார் அதிரடியாக ஆடினால் இந்திய அணிக்கு பெரும் சிரமம் ஆகும்.


பவுலிங் எப்படி?


பந்துவீச்சைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப். நசீம் ஷா, அமீர் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்படும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் பந்துவீச்சு பலமாக பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் உள்ளனர். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப்சிங் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.


பயிற்சி ஆட்டத்திலும், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா, அக்‌ஷர் படேல் சிறப்பாக பந்துவீசினால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஆவது உறுதியாகும்.


இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு இந்திய நேரப்படி நடக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.