விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். போட்டியின் முதல் நாளான நேற்று மட்டும் இந்திய அணிக்காக முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 179 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகளை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்தார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். 


முதல் நாளில் அதிக ரன்கள்:


இங்கிலாந்துக்கு எதிரான டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதன் போது அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 336 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி இந்தியாவுக்காக ஓபன் செய்ய வந்திருந்தார். 257 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 179 ரன்கள் குவித்தார். யஷஸ்வியின் இந்த இன்னிங்ஸில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அவுட்டான இந்திய அணி வீரர்கள் பெவிலியன் திரும்பும் போது, ​​யஷஸ்வி தனது பேட்டிங்கில் நங்கூரமாய் நின்றார். 


டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் சேவாக் முதலிடத்தில் உள்ளார். 2004ல் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக 228 ரன்கள் எடுத்தார். 2003ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேவாக் 195 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தாவில் பாகிஸ்தானுக்கு எதிராக வாசிம் ஜாபர் 192 ரன்களும், 2017ல் இலங்கைக்கு எதிராக ஷிகர் தவான் 190 ரன்கள் எடுத்திருந்தார்கள். 2006ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சேவாக் 180 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து யஷஸ்வி 179 ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார். 






கடந்த 2011 ம் ஆண்டுக்கு பிறகு முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்: 






கடந்த 2011 ம் ஆண்டுக்கு பிறகு முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஷிகர் தவான் 190 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தற்போதையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 161 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான விராட் கோலி 156 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 


இந்த பட்டியலில் முரளி விஜய் 155 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்த ரன்னை குவித்தார்.


முதல் நாள்: 


விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் போது கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களிலும், சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும், ரஜத் படிதார் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அக்சர் படேலும் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.