மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராபோர்ட் நகரில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு இங்கிலாந்து அணி 260 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பிடித்த அற்புதமான கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேட்டிங் மற்றும் பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் ஜடேஜா எப்போதும் அசத்தலான வீரராகவே உள்ளார். இந்த போட்டியில் ஆட்டத்தின் 37வது ஓவரை பாண்ட்யா வீசினார். அந்த ஓவரில் லிவிங்ஸ்டன் 3வது பந்தில் சிக்ஸருக்கு அடித்த பந்தை ஜடேஜா ஓடிவந்து கேட்ச் பிடித்தார்.
லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்த அதே ஓவரின் கடைசி பந்தில் இங்கிலாந்து கேப்டன் அதே திசையில் பாண்ட்யா பந்தில் சிக்ஸருக்கு பந்தை விளாசினார். ஆனால், அந்த திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா ஓடி வந்து பாய்ந்து அந்த பந்தை கேட்ச் பிடித்து கீழே விழுந்து மீண்டும் எழுந்தார். அவர் கீழே விழும்போது பலமாக விழுந்தாலும் அவர் கேட்ச்சை தவறவிடவில்லை. கேட்ச்சை பிடித்த பிறகு தனக்கே உரிய பாணியில் ஜடேஜா ஒரு போஸ் கொடுத்தார்.,
இங்கிலாந்து அணி தடுமாறிக்கொண்டிருந்தபோது அணியை தனி ஆளாக மீட்ட பட்லர் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு சுருண்டது. இல்லாவிட்டால் இங்கிலாந்து 300 ரன்களை கடந்திருக்கும். பட்லர் கடைசியில் 80 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா பிடித்த இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சாஹலின் சிறப்பான பவுலிங்கால் இங்கிலாந்து அணி 259 ரன்களுக் ஆல் அவுட்டாகியது. தற்போது, இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கை நோக்கி கேப்டன் ரோகித்சர்மா - ஷிகர்தவான் ஜோடி ஆடி வருகின்றனர்.
மேலும் படிக்க : IND vs ENG 3rd ODI: பட்லர் அபார அரைசதம்..! ஹர்திக் அசத்தல் பவுலிங்..! 260 ரன்கள் இலக்கை எட்டுமா இந்தியா..?
மேலும் படிக்க : Babar Azam Beat Kohli Record : அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்! கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்