இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது  மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ரோகித்சர்மா பந்துவீச்சையே தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்துக்கு முகமது சிராஜ் அதிர்ச்சி அளித்தார். அவர் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே அதிரடி வீரர் பார்ஸ்டோ, ஜோ ரூட் டக் அவுட்டாகி வௌியேறினர்.


களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடி வந்த ஜேசன் ராய் ஹர்திக் பாண்ட்யா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 31 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசிய நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்களில் அவுட்டானார்.




74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில், கேப்டன் பட்லரும், மொயின் அலியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து ஆடினர். அணியின் ஸ்கோர் 149 ரன்களை எட்டியபோது பொறுப்புடன் ஆடி வந்த மொயின் அலி 44 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து பட்லருடன், லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார்.


அதிரடியாக ஆட்டத்தை ஆடத் தொடங்கிய சற்று நேரத்தில் லிவிங்ஸ்டன் 31 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் 27 ரன்களில் அவுட்டானார். அணியின் ஸ்கோர் 199 ரன்கள் எடுத்தபோது மறுமுனையில் பொறுப்புடன் ஆடி வந்த பட்லர் 80 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவில் வில்லி 18 ரன்களில் அவுட்டானர்.




கடைசி கட்டத்தில் கிரெக் ஓவர்டன் பொறுப்புடன் ஆடினார். அவர் 33 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசி ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் 259 ரன்கள் விளாசியது. இந்திய அணியின் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 7 ஓவர்கள் மட்டுமே வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து அதில் 3 ஓவர்கள் மெய்டனாக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண