இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நாளை மறுநாள் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறது. இந்திய அணி பலமிகுந்த அணியாக இருந்தாலும் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் ஓய்வுக்கு பிறகு முதன்முறையாக ஆடும் டெஸ்ட் போட்டி என்பதே இதற்கு காரணம். 

Continues below advertisement

இந்திய அணியை அழைத்த விராட் கோலி:

கடந்த மாதம் திடீரென தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த விராட் கோலி, தற்போது இங்கிலாந்து நாட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஐபிஎல் வெற்றிக்கு பிறகு லண்டனில் உள்ள விராட் கோலி, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியினரை அங்குள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். 

கேப்டன் சுப்மன்கில், துணை கேப்டன் ரிஷப்பண்ட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் விராட் கோலி வீட்டிற்குச் சென்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அவரது இடத்தை கடந்த 12 ஆண்டுகளாக தாங்கிப் பிடித்து இந்திய அணியை கம்பீரமாக ஆட வைத்தவர் விராட் கோலி. இங்கிலாந்து மண்ணிலும் அளப்பரிய சாதனைகளை படைத்துள்ளார். 

Continues below advertisement

என்ன சொன்னார்?

இந்த சந்திப்பில் சுப்மன்கில், ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் போன்ற பல இளம் வீரர்களுக்கு இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையையும், இந்த ஆடுகளங்களில் எப்படி ஆட வேண்டும்? என்பதையும் விராட் கோலி விரிவான ஆலோசனையாக வழங்கியதாக கூறப்படுகிறது. அணியை முதன்முறையாக வழிநடத்தும் சுப்மன்கில்லிற்கும் சிறப்பு ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. லீட்ஸ்,  பர்மிங்காம், லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஓவலில் இந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடுகிறது. ஒவ்வொரு மைதானமும் இதில் இந்திய அணிக்கு சவால் மிகுந்த மைதானம் ஆகும். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு இன்னும் பலமாக உள்ளது.

இளம் பட்டாளம்:

இவர்களை இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சுப்மன்கில், சாய் சுதர்சன், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் எப்படி எதிர்கொள்ள போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் மட்டுமே இவர்களில் அனுபவசாலி. இவர்கள் அனைவருக்கும் விராட் கோலி தனது அனுபவத்தை ஆலோசனைகளாக இந்த சந்திப்பில் வழங்கியதாக கூறப்படுகிறது. விராட் கோலியின் அறிவுரை இந்திய அணிக்கு மிகுந்த பயன் தந்ததாகவும் கூறப்படுகிறது.