இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 76* ரன்களும், ஷிகர் தவான் 31* ரன்களும் எடுத்தனர். இதனால் 18.4 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


 


நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 54 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 76* ரன்கள் விளாசினார். அவர் 5வது ஓவரில் வில்லே வீசிய பந்தை லாவகமாக மடக்கி ஷாட் அடித்து சிக்சருக்கு விரட்டினார். அந்தச் சமயத்தில் மைதானத்தில் இந்த குழந்தை ஒன்றின் மீது பந்து பட்டது. இதைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. 


 






இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் அச்சிறுமிக்கு என்ன நடந்து என்று களத்திலிருந்து பார்ப்பது போல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 


 


முன்னதாக இந்த போட்டி மூலம் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 250 சிக்ஸ்ர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற அரிய சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ரோகித் சர்மா இதுவரை 231 ஒருநாள் போட்டிகளில் 224 இன்னிங்சில் பேட் செய்து 250 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.  இவற்றில் பவுண்டரிகள் 852 அடங்கும்.


 


35 வயதான ரோகித்சர்மா 45 டெஸ்ட் போட்டிகளில்  64 சிக்ஸர்களையும், 128 டி20 போட்டிகளில் 157 சிக்ஸர்களையும், 227 ஐ.பி.எல். போட்டிகளில் 240 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரத்து 137 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 9 ஆயிரத்து 283 ரன்களையும், டி20 போட்டியில் 3 ஆயிரத்து 379 ரன்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரத்து 879 ரன்களையும் விளாசியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண